சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த சூப்பர் பிளான்.. அனைத்து மாவட்டங்களிலும் களமிறக்கப்படும் அமைச்சர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் நோய்த்தொற்று போன்ற அவசரக் காலங்களில் அவசரக்கால பணிகளைக் கூடுதலாகக் கவனிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பணிகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பொறுப்பு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்துவார்கள் என்றும் இயற்கை சீற்றம் காலங்களில் அவசரக்கால பணிகளைக் கவனிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது,

Rain alert: அடுத்த 3 நாட்களுக்கு அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தமிழகம் & கேரளாவுக்கு எச்சரிக்கைRain alert: அடுத்த 3 நாட்களுக்கு அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தமிழகம் & கேரளாவுக்கு எச்சரிக்கை

தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு உத்தரவு

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரக்கால பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி. வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்திற்குக் கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Array

Array

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திற்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    Neet Exam விவகாரம்.. Delhi அனுப்பிய பளீர் மெசேஜ்? ஏற்றுக்கொள்ளாத முதல்வர் Stalin
    Array

    Array

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குச் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu govt latest announcement on district development. Tamilnadu govt latest announcements.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X