• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நீடிக்கும் அரசியல் நாகரீகம்.. சபாஷ்.. எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசு ஆட்சிக்கு வந்து இன்றோடு 49 நாட்கள் ஆகியுள்ளன. ஆனாலும் என் மீதும், திமுக அரசின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக இப்போதே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கலாமே என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  சட்டப்பேரவை நிகழ்வுகள் 24-06-2021

  சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,
  அறிவித்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே, ஏன்? என கேள்வி எழுப்பினார்.

  அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு ட்ரெய்லர்தான். முழு நீளத் திரைப்படத்தைத் திரையில் காண்க என்று முன்னர் சொல்லி வந்ததுபோல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதைச் சந்திக்கும் சவால்கள் அனைத்தும் விரைவில் வர உள்ள பட்ஜெட் அறிக்கையில் சொலலிவிடுவோம்.

  +2 ரிசல்ட்.. நாடு முழுக்க ஒரே கணக்கீடு முறையை பயன்படுத்த வேண்டியதில்லை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு +2 ரிசல்ட்.. நாடு முழுக்க ஒரே கணக்கீடு முறையை பயன்படுத்த வேண்டியதில்லை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு

  எடப்பாடி பழனிசாமி கேள்வி

  எடப்பாடி பழனிசாமி கேள்வி


  பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி, நாங்கள் 10 ஆண்டுகள் பொறுத்திருந்தோம். இப்போதுதான் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். அதில் ஒரு துளிகூட உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் கொடுத்ததை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.

  ஸ்டாலின் நன்றி

  ஸ்டாலின் நன்றி

  நாங்கள் (திமுக அரசு) ஆட்சிக்கு வந்து இன்றோடு 49 நாட்கள் ஆகியுள்ளன. ஆனாலும் என் மீதும், திமுக அரசின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக இப்போதே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கலாமே என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஸ்டாலின் உறுதி

  ஸ்டாலின் உறுதி

  தமிழ்நாட்டு மக்ககளின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதில் துளியளவும் சந்தேகம் வேண்டாம். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து நாட்டு மக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதற்கான பணிகளில்தான் எங்களை நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம்.

  வருத்தம் பதிவு

  வருத்தம் பதிவு

  சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் திமுக அரசின் முதல் 30 நாட்கள் எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டு செய்தி பதிவிட்டதைக் கண்டிருப்பீர்கள். திமுகவிற்கு வாக்களிக்கவில்லையே என்று பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள் எங்களுக்கு வாக்களித்தவர்கள் இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே என்று வருத்தப்படும் வகையில் இருப்போம் என்று நான் ஏற்கெனவே பேட்டி அளித்தபடி செயல்பட இத்தகைய பதிவுகள் எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

  ஸ்டாலின் விளக்கம்

  ஸ்டாலின் விளக்கம்

  பதவி ஏற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க உத்தரவிடப்பட்டது. முதல் தவணையாக ரூ.2000 மற்றும் ஜூன் 3 அன்று இரண்டாவது தவணை ரூ.2000 என மொத்தம் 8,393 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அடுத்து மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கும் அது நீட்டிக்கப்பட்டது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் இன்று காலை வரை 75,546 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை, கரோனாவைக் கட்டுப்படுத்த கட்டளை மையம், தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்றி 47 நாட்களில் 67 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.

  English summary
  Chief Minister MK Stalin thanks Edappadi Palanisamy in assembly due to expressed confidence that all the promises will be fulfilled soon.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X