• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

குறைகள் சொன்னால் ஏற்கும் முதல்வர் ஸ்டாலின்.. அடுத்தடுத்து உத்தரவிட்ட இரண்டு விஷயங்கள்

Google Oneindia Tamil News

சென்னை : ஒரு நல்ல தலைவர் என்பவர்.. குறைகளை சொன்னால் சரி செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அப்படியே ஏற்றுக்கொள்கிறார் ... அவர் அண்மையில் ஏற்றுக்கொண்ட இரண்டு விஷயம்.. சமூக நீதி குழுவில் பெண்கள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றார். இதேபோல போக்குவரத்து துறைக்கு ஆவின் நிறுவனத்திடம் இருந்து ஸ்வீட் ஆர்டர் எடுக்கவும் உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த மே மாதம் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தது முதலே பல விஷயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதேநேரம் குறைகளை சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொண்டு நடவடிக்கையும் எடுத்துள்ளார்,

வீண் பிடிவாதமோ, அல்லது அரசியல் செய்வதாகவோ எண்ணாமல் நியாயமான காரணமாக இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டு வருகிறார் என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். அண்மையில் அப்படி இரண்டு விஷயங்களில் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறுகிறாரகள். அதை இப்போது பார்ப்போம்.

கான்வாயை நிறுத்துங்க.. பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களிடம் குறை கேட்ட முதல்வர் ஸ்டாலின் கான்வாயை நிறுத்துங்க.. பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களிடம் குறை கேட்ட முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் "சமூகநீதிக் கண்காணிப்புக் குழு'' அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

பாலின சமத்துவம்

பாலின சமத்துவம்

அந்த அறிவிப்பின் படி சுப வீரபாண்டியன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் சமூக நீதி கண்காணிப்பு குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த குழுவின் ஒரு பெண் கூட இல்லை. பாலின சமத்துவமே இல்லாத இந்த குழு சமூக நீதியை எப்படி கண்காணிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்தது. இதுபற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின், மகளிர்- மாணவர் உரிமைக்காகப் போராடும் மருத்துவர் சாந்தியை சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமித்து உத்தரவிட்டார்.

ஸ்வீட் டெண்டர்

ஸ்வீட் டெண்டர்

இதேபோல் அண்மையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட் வழங்கும் டெண்டரில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களே டெண்டரில் பங்கேற்க முடியும் என்று உள்ளதாக சமூக வலைதளங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் சுடடிக்காட்டினார். இதுகுறிப்பிட்ட சிலருக்கே சாதகமாக முடியும் என்றும் புகார் எழுந்தது.

ஆவின் மூலம் வாங்குதல்

ஆவின் மூலம் வாங்குதல்

இதையடுத்து இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின், டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ததுடன், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் ஸ்வீட் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்வீட்கள் ஆவின் மூலம் வாங்கப்பட்டு வருகிறது. இதை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலினை சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்.

ஸ்டாலின் அதிரடி

ஸ்டாலின் அதிரடி

முதல்வர் ஸ்டாலின் துறை ரீதியான புகார்களை கேட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அமைச்சர்களையும் எச்சரித்து செயல்பட வைப்பதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏதேனும் விமர்சனங்கள் குறைகள் எது வந்தாலும் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

English summary
A good leader .. If you say grievances should be corrected. Chief Minister Stalin agrees ... Two things he recently agreed to ... Accepting the demand for women to be included in the Social Justice Committee. He similarly ordered the Department of Transport to take sweet orders from Avin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X