சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அர்ச்சகர்கள் உள்பட கோயில் ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரணத் தொகை.. முதல்வர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள், புரோகிதர், நாவிதர், பண்டாரம், காதுகுத்துபவர்கள், குயவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு ஏற்கனவே 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1000 ரொக்க நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்,

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

Chief Minister Palanisamy Announced rs 1000 Cash Relief in addition to Temple Priest

ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2010 அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை நிதியுதவி வரும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8340 அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும் திருக்கோயில்களில் ஊதியமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியம் நாவிதர், பண்டாரம்/ பண்டாரி, மாலைக்ட்டி, பரிச்சாரகர்/ சுயம்பாகம், வில்வம், காது குத்துபவர்/ ஆசாரி, நாமவளி, மிராசு கணக்கு, கங்காணி திருவிளக்கு, முறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர், தாசநம்பி போன்ற பணியாளர்களுக்கு ஏற்கனவே சிறப்பு நேர்வாக ரூ.1000 ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டு விட்டது.

சர்வதேச செவிலியர் தினம் 2020: கொரோனா லாக் டவுனில் செவிலியர்களை கொண்டாடுவோம்சர்வதேச செவிலியர் தினம் 2020: கொரோனா லாக் டவுனில் செவிலியர்களை கொண்டாடுவோம்

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு மேலும் ரூபாய் 1000 ரொக்க நிவாரணத் தொகையாக திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும் " இவ்வாறு அறிவித்துள்ளார்.

English summary
rs 1000 Cash additional Relief to Temple Priest: Announced by Chief Minister Palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X