சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

70-வது குடியரசு தினம் கோலாகலம்... விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி

குடியரசு தினவிழா கோலாகலம்... விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    70th Republic Day | சென்னையில் குடியரசு விழா: கொடியேற்றிய ஆளுநர், விருதுகளை வழங்கிய முதல்வர்!

    சென்னை : 2019ம் ஆண்டின் தமிழக அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை சூர்யகுமார், ரஞ்சித் குமார், ஸ்ரீதர் ஆகிய 3 பேருக்கு வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

    நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

    சென்னை மெரினா காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு முதல்வர் பழனிசாமி விருதுகள் வழங்கி கௌரவித்தார்

    3 பேருக்கு அண்ணா பதக்கம்

    3 பேருக்கு அண்ணா பதக்கம்

    குரங்கணி தீவிபத்தின் போது 8 உயிர்களைக் காப்பாற்றியவர் தேனி மாவட்டம் போடியைச் ரஞ்சித் குமார், சென்னையில் நகைத் திருடனைத் துரத்திப் பிடித்து சாதனை படைத்த சிறுவன் சூரியக்குமார். தஞ்சை மாவட்டம் வெள்ளங்கி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 6 பேரைக் காப்பாற்றியவர் ஸ்ரீதர். அண்ணா பதக்கம் பெற்ற 3 பேருக்கும், ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலை, தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வேளாண் துறை சிறப்பு விருது

    வேளாண் துறை சிறப்பு விருது

    திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெற்றதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சேவியருக்கு வேளாண் துறை சிறப்பு விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    காந்தியடிகள் பதக்கம்

    காந்தியடிகள் பதக்கம்

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் மெச்சத்தக்க வகையில் செயல்பட்ட ஏடிஎஸ்பி வேதரத்தினம் (கடலூர்), ஆய்வாளர் பிரகாஷ் (ஓசூர்), உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்(அரியலூர்), சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருக்குமார் (திருச்சி), தலைமைக் காவலர் கோபி (நாமக்கல்) ஆகியோருக்கு காந்தியடிகள் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

    ஆளுநர்கொடி ஏற்றினார்.

    ஆளுநர்கொடி ஏற்றினார்.

    குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள விழா மேடையில் மூவர்ண கொடியை ஏற்றினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இதனைத் தொடர்ந்து, முப்படை வீரர்கள், காவல் துறை மற்றும் பல்வேறு படை பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர். இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெற்றது.

    English summary
    Chief Minister Palanisamy gave awards to Suryakumar, Ranjith Kumar and Sridhar for the heroic performance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X