சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்துறைச் செயலர், டிஜிபி உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை: காரணம் இதுவா?

Google Oneindia Tamil News

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கிடையே தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் நடத்தியுள்ளார். மேலுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், போதைப்பொருள் புழக்கம் என்று கூறப்பட்டாலும் உண்மையான காரணம் வேறொன்று என்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.

நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

 தமிழக முதல்வர்களும் சவால்களும்

தமிழக முதல்வர்களும் சவால்களும்

தமிழக முதல்வர்களாக ராஜாஜி காலம் தொடங்கி காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி என இருந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தற்போது பதவியில் உள்ளார். பல்வேறு காலக்கட்டங்களில் மாநிலத்தில் நடக்கும் பிரச்சினைகளை முதல்வர்கள் முக்கிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

 மத்திய உளவுப்பிரிவு(ஐபி) மாநில உளவுப்பிரிவுகளும்

மத்திய உளவுப்பிரிவு(ஐபி) மாநில உளவுப்பிரிவுகளும்

மாநிலங்கள் தங்களது சுயேச்சையான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக தங்களுக்கென உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு, உளவுப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு என மூன்றடுக்கு முறைகளை வைத்துள்ளது. இதுதவிர மத்திய அரசின் உளவுப்பிரிவு "IB" யும் மாநிலத்தில் உளவுவேலைகளை பார்க்கும். இதன் அடிப்படை சட்டம் ஒழுங்கை சரியாக கையாளுவதே.

 கண்காணிப்பின் முக்கியத்துவம்

கண்காணிப்பின் முக்கியத்துவம்

மத்திய அரசு எப்போதும் மாநிலம் முழுவதும் அந்நிய சக்திகள், மாநிலங்களுக்குள் தோன்றும் இயக்கங்கள், இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படும் இயக்கங்கள் இதில் அரசின் ஆதரவு உள்ளதா? என்பன உட்பட கண்காணிக்கும். இதற்காக மத்திய உளவுப்பிரிவு (IB) உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பு இது. இதன் ரிப்போர்ட் படியே மத்திய அரசின் நடவடிக்கையும் இருக்கும்.

இதில் மத்திய உளவுத்துறை அனுப்பும் ரிப்போர்ட் அடிப்படையில் மத்திய அரசு மாநிலங்களை அணுகும், தற்போதுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய உளவுப்பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தவர். இதை எழுதக்காரணம் மேற்கண்ட கட்டமைப்பில் தான் மாநில சட்டம் ஒழுங்கு இயங்குகிறது. இதில் அவ்வப்போது எழும் பிரச்சினைகள் முதல்வருக்கு ரிப்போர்ட்டாக போகும். முதல்வரும் ஆலோசனை நடத்துவார்.

 முதல்வர் தலைமையில் உயர் காவல் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்

முதல்வர் தலைமையில் உயர் காவல் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அதிகாரிகள் மாற்றம், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தக்கூட்டத்தில் முதல்வருடன் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், உள்நாட்டு பாதுகாப்பு ஐஜி ஈஸ்வரமூர்த்தி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சட்டம் ஒழுங்கு, ஐபிஎஸ் இடமாற்றம், நகராட்சி தேர்தல், இஸ்லாமிய கைதிகள் விடுதலை

சட்டம் ஒழுங்கு, ஐபிஎஸ் இடமாற்றம், நகராட்சி தேர்தல், இஸ்லாமிய கைதிகள் விடுதலை

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தமிழகத்தில் குட்கா, கஞ்சா அதிகம் புழங்குகிறது அது குறித்இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தமிழகத்தில் குட்கா, கஞ்சா அதிகம் புழங்குகிறது அது குறித்து கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும், மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளதால் மாநகராட்சிகளில் உள்ள காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்கள் விடுதலை விவகாரத்தில் முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்கிற இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது எனத்தெரிவித்தனர். து கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும், மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளதால் மாநகராட்சிகளில் உள்ள காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது உள்ளிட்டவை குறித்து பேசப்படலாம் என்று சூசகமாக தெரிவித்தனர்.

 விவாதப் பொருளில் உள்ள விஷயம்

விவாதப் பொருளில் உள்ள விஷயம்

ஆனால் சென்னை காவல் ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்ளும் ஆலோசனைக்கூட்டத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று தலைமைச் செயலக வட்டாரத்திலும், காவல்துறை உயர் அதிகாரிகளிடையேயும் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த சோ ஜே வோன் & சோய் யோங் சுக் ஆகியோர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்காக, கைது செய்யப்பட்டு திருச்சியில் கண்காணிப்பு மையத்தில் இருந்தனர்.

 தப்பி ஓடிய தென் கொரியர்கள்

தப்பி ஓடிய தென் கொரியர்கள்

பின்னர் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆர்டர் வாங்கி செங்கல்பட்டில் தனி வீட்டில் போலீஸ் கண்காணிப்பில் இருந்தனர். அதற்கான முழுச்செலவையும் அவர்கள் ஏற்றிருந்தனர். இந்நிலையில் அவர்கள் போலி ஆவணங்களைப்பயன்படுத்துவதாக பாலூர் ஸ்டேஷன் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்ட நிலையில் இருவரையும் திடீரென காணவில்லை. இது மத்திய உளவுத்துறையால் சீரியசாக பார்க்கப்பட்டு ரிப்போர்ட் போடப்பட்டுள்ளது.

 இதுவும் முக்கிய விவாதப்பொருள்

இதுவும் முக்கிய விவாதப்பொருள்

அவர்கள் மீண்டும் தென் கொரியாவுக்கே தப்பிச் சென்றுள்ளார்களா? அல்லது தமிழகத்தில் எங்காவது தலைமறைவாக உள்ளார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் மத்திய அரசின் வரி வருவாய்த்துறை குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் சற்று கவனமாக பார்க்கப்படுகிற்து. இந்நிலையில் அவர்களை பிடிக்கவும், இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் முதல்வர் உயர் அதிகாரிகளின் கருத்தைப்பெற்று சில வழிகாட்டுதல்களை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

English summary
Chief Minister's consultation with Home Secretary, DGP and officials: Is this the reason?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X