சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்ஸ் அப்பில் வருவதை படித்து வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என திராவிட மாதத்தையொட்டி ட்விட்டர் ஸ்பேஸில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், ட்விட்டர் ஸ்பேஸில் 'திராவிடத்தைக் கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

இந்த தளத்தின் வாயிலாக திமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இன்றுடன் செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ளது.

மேற்க உங்களது..கிழக்க எங்களது! வந்ததே 3 பேரு..மாவட்டத்தை பிரித்து கொடுத்த ஓபிஎஸ்! கடுப்பான ர.ர.க்கள்மேற்க உங்களது..கிழக்க எங்களது! வந்ததே 3 பேரு..மாவட்டத்தை பிரித்து கொடுத்த ஓபிஎஸ்! கடுப்பான ர.ர.க்கள்

முதல்வர் மு.க. ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின்


இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரை நிகழ்த்தினர். குறிப்பாக இன்றைய நாளில் முதல் முறையாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திமுக அமைச்சர்கள், ஐடி விங் நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று முதல்வர் உரையை கேட்டனர்.

திராவிடம்

திராவிடம்

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்," திராவிடம் தமிழருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது, சமூக நீதியை நிலை நாட்டியது. திராவிடம் பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திராவிடம் தான். இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிரவைத்தது. தமிழகத்தின் தமிழ் மறுமலர்ச்சிக்கு காரணமாக அமைந்தது திராவிடம் தான்.

வாட்ஸ் அப்பில் வாந்தி

வாட்ஸ் அப்பில் வாந்தி


மேலும்,"தொழில் நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும் கழகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. இணையத்தில் இயங்கும் நீங்கள் உங்கள் காலத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யுங்கள். நமது சாதனைகளை சொல்லுங்கள், நமது கொள்கையை சொல்லுங்கள் தவறான தகவலாக இருந்தால் அதற்கு உண்மையான தகவலை சொல்லுங்கள்.

 கவுண்டர் கொடுங்கள்

கவுண்டர் கொடுங்கள்

நமது எதிரிகள், மதவாத சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள் கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவர்கள், இவை அனைத்தையும் புறந்த தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது என்பதை பார்த்தாலே திராவிட இயக்கத்தின் சாதனைகள் அனைவருக்கும் புரியும். எனவே பொய் செய்திகளுக்கு பதில் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதே நேரத்தில் ஒரு செய்தி வந்தால் அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்யும் அளவுக்கு பொய் செய்திகளை பரப்பி கேம் ஆடலாம் என நினைப்பவர்களுக்கு கவுண்டர் அடித்து பாடம் புகட்டுங்கள்" என பேசினார்.

English summary
Tamil Nadu Chief Minister and DMK President Stalin said that Dravidian made Tamil Nadu the best state of India and Dravidians were the cause of Tamil renaissance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X