சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா.. பரபரப்பான எதிர்பார்ப்பில் தமிழகம்!

இந்த மாதம் ஓய்வு பெறுகிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Girija Vaithiyanathan: அரசு ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் அதிரடி!- வீடியோ

    சென்னை: தமிழகம் மீண்டும் ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பில் மூழ்கவுள்ளது. அது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா இல்லையா என்பது.

    தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்திய விஐபிக்கள் வரிசையில் நிச்சயம் கிரிஜா வைத்தியநாதனுக்கு தனி இடம் உண்டு. அவர் வகித்த அத்தனை பதவிகளிலும் தனி முத்திரை பதித்தவர் கிரிஜா வைத்தியநாதன்.

    அதை விட முக்கியமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர். ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பெற்றிருந்த உயர் அதிகாரிகளில் இவருக்கும் தனி இடம் உண்டு.

    இதுவா அதுவா.. அவரா இவரா.. ஒரே குழப்பமா இருக்கேப்பா.. திமுகவுக்கு புது சவால்!இதுவா அதுவா.. அவரா இவரா.. ஒரே குழப்பமா இருக்கேப்பா.. திமுகவுக்கு புது சவால்!

    சர்ச்சைகள்

    சர்ச்சைகள்

    கிரிஜா வைத்தியநாதன் 1981 பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாதவர். இருப்பினும் தலைமைச் செயலாளர் பதவிக்கு இவர் வந்தது முதல் இவரைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் வட்டமடித்தன.

    அழுத்தங்கள்

    அழுத்தங்கள்

    அன்று கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டதுமே இதனை கார்டன், மன்னார்குடி தரப்பினர் பெரிசாக விரும்பவில்லை. அதனால் இவர்கள் தரப்பிலிருந்து சில அழுத்தங்கள் வந்தன.. நெருக்கடிகள் சூழ்ந்தன.. அதிகார மையம் என்ற பேரில் ஒருசில இக்கட்டான சூழல்களும் வந்தன. ஆனால் எல்லாவற்றையும் அமைதியுடன் கையாண்டார்.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    தன் மீது வலிந்து திணிக்கப்பட்ட அதிகாரத்தை அரசு மீதும் அதன் செயல்பாட்டின் மீதும் எப்போதுமே இவர் காட்டியதில்லை. ஒருவழியாக எடப்பாடி முதல்வரானதும் இவையெல்லாம் ஓரளவு அடங்கின. மத்திய அரசோ, மாநில அரசோ.. யார் எந்த நலத்திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை பாகுபாடும் இல்லாமல் நிறைவேற்ற முழு ஒத்துழைப்பை தந்தவர் கிரிஜா என்பதை மறுக்க முடியாது!

    அனுமதிக்குமா?

    அனுமதிக்குமா?

    2016ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் தலைமைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார் கிரிஜா வைத்தியநாதன். இதோ இந்த மாதம் இவர் பணி ஓய்வு பெறவுள்ளார். ஆனால் இப்போது கேள்வியே இவர் ஓய்வு பெற தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ அனுமதிக்குமா என்பதுதான்.

    பதவி நீட்டிப்பு?

    பதவி நீட்டிப்பு?

    கிரிஜா வைத்தியநாதன் மாதிரியான அதிகாரி கிடைப்பது அரிதிலும் அரிது என்பதால் அவரை விட மத்திய அரசுக்கும் சரி, மாநில அரசுக்கும் சரி மனசு இருக்காது என்பதே உண்மை. எனவே நிச்சயம் கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என்ற கருத்து வலுவாக அடிபடுகிறது.

    எஸ்வி சேகர்

    எஸ்வி சேகர்

    கிரிஜா வைத்தியநாதனைப் பொறுத்தவரை அதிகம் பேசாதவர். தனது வேலையில் ஆழ்ந்த கவனத்துடன் ஈடுபடக் கூடியவர். நடிகர் எஸ்.வி.சேகர் விவகாரத்தில் இவரது பெயர் பலமாக அடிபட்டபோது கூட அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் தனது பணியில் மட்டும் கவனமாக இருந்தவர்.

    நல்ல பாலம்

    நல்ல பாலம்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு கொடுத்து அரசுப் பணிகளை அழகாக வழிநடத்திச் சென்று வருகிறார். மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்ல பாலமாக செயல்பட்டும் வருகிறர். இப்படிப்பட்ட நிலையில் அவருக்கு பதவி ஓய்வு என்பது இப்போதைக்கு இருக்காது என்றே நம்பப்படுகிறது.

    English summary
    TN Chief Secretary Girija Vaidyanathan will retire from her service this month. However, her service period may be extended
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X