• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்ன மனுசய்யா இவரு.. இறையன்பு ஐஏஎஸ்சின் செயலால் ஆச்சர்யத்தில் அதிகாரிகள்!

|

சென்னை : தமிழ் மீது அதீத பற்று, இளம் வயது மாணவர்களிடம் தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்தவர், பல பேர் இன்றைக்கு ஐஏஏஸ் படிக்க உந்துதலாக இருப்பவர், துறை ரீதியாகவும் எந்த கரையும் படியாதவர், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மிகுந்த அனுபவசாலி என்று பல பாராட்டுக்களை பெற்றவர் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஏஸ். அவர் தற்போது எடுத்துள்ள புதிய முடிவை பார்த்து உடன் பணியாற்றும் அத்தனை அதிகாரிகளும் வாயடைத்து போயிள்ளனர்.

  ஒரே வீட்டில் இரண்டு IAS அதிகாரிகள் | Irai Anbu IAS Unknown Facts

  தமிழகத்தின் தலைமை செயலாளராகி உள்ள இறையன்பு ஐஏஏஸ். தனது பதவி காலத்தில் தன்னை சுற்றி எந்தவிதமான சர்ச்சைகளுமே இருக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார்.

  இறையன்பு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதை தாண்டி, புகழ் பெற்ற எழுத்தாளர், ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பேச்சாளர். அவரது தன்னம்பிக்கை நூல்கள், ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராக விரும்புவோருக்கு மிகச்சிறந்த வழிகாட்டி நூல்கள் ஆகும்.

  நான் எழுதிய புத்தகங்களை வாங்கி பரிசளிக்க வேண்டாம்... பள்ளிக்கல்வித்துறைக்கு வெ.இறையன்பு வேண்டுகோள் நான் எழுதிய புத்தகங்களை வாங்கி பரிசளிக்க வேண்டாம்... பள்ளிக்கல்வித்துறைக்கு வெ.இறையன்பு வேண்டுகோள்

  எத்தனை நூல்கள்

  எத்தனை நூல்கள்

  இவரது நூல்களில் சிலவற்றை இப்போது பார்ப்போம். இலக்கியத்தில் மேலாண்மை, ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும், படிப்பது சுகமே. சிற்பங்களைச் சிதைக்கலாமா, பணிப் பண்பாடு, ஆத்தங்கரை ஓரம், சாகாவரம், வாய்க்கால் மீன்கள், நரிப்பல், Steps to Super Student, சிம்மாசன சீக்ரட், துரோகச் சுவடுகள், ஏழாவது அறிவு பாகம்-1, ஏழாவது அறிவு பாகம்-2, ஏழாவது அறிவு பாகம்-3, அரிதாரம், ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள், பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் அழகோ அழகு. சின்னச் சின்ன வெளிச்சங்கள், உள்ளொளிப் பயணம், ஓடும் நதியின் ஓசை பாகம்-1, ஓடும் நதியின் ஓசை பாகம்-2, மென்காற்றில் விளை சுகமே, முகத்தில் தெளித்த சாரல், முடிவு எடுத்தல், நேரம், காகிதம், வனநாயகம், வரலாறு உணர்த்தும் அறம், ஆர்வம், ஆணவம், மருந்து, மழை, திருவிழாக்கள், இணையற்ற இந்திய இளைஞர்களே, ரயில் பயணம், விவாதம் என100க்கணக்கான நூல்களை எழுதி உள்ளார்.

  கடிதம் எழுதிய இறையன்பு

  கடிதம் எழுதிய இறையன்பு

  இந்நிலையில் தனது நூல்களை வாங்க வேண்டாம் என்று பள்ளிகல்வித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன்.

  பணம் வசூலிக்கப்படும்

  பணம் வசூலிக்கப்படும்

  எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன். இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  நெருப்பு

  நெருப்பு

  பதவி கிடைத்தாலே லட்சங்களை கோடிகளையும் சம்பாதிக்க விருமபுவோர் அதிகமாகிவிட்ட இந்த காலத்தில் தன் மீது சிறு கரையும் பட்டுவிடக்கூடாது என்பதில் இவ்வளவு உறுதியாக இறையன்பு ஐஏஏஸ் இருப்பதை பார்த்து அதிகாரிகள் பலரே ஆச்சர்யத்தில் உள்ளனர். தீ மட்டுமல்ல நேர்மையும் சுடும் என்பது புது மொழி. நேர்மை, நேர்மையாக இருப்பவர்கள் நெருப்பு என்பதால் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் சுடுமையாக சுடும். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் அதில் இருந்து சற்றும் விலகாமல் கடைசி வரை இருப்பது தான் மிகப்பெரிய 'வலிமை'. ஆரம்பத்தில் நேர்மையாக பணியை ஆரம்பிக்கும் அதிகாரிகள் போக போக அதிகாரத்தின் நெருக்குதல் காரணமாகவோ அல்லது வேறு பண ஆசையின் காரணமாக மாறுகிறார்கள். ஆனால் கடைசி வரை சிலரே நேர்மையை கடைபிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இறையன்பு ஐஏஎஸ். அதனால் தான் தன் மீது களங்கம் வந்து விடக்கூடாது என்பது மிகவும் கவனமாக இருக்கிறார். அதன் வெளிப்பாடு தான் இன்றைக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு அவர் எழுதிய கடிதம்.

  நேர்மை

  நேர்மை

  திருவள்ளூர் ஒரு திருக்குறளில்அருமையாக சொல்லியிருப்பார் :

  நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
  மலையினும் மாணப் பெரிது.

  அதாவது தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.. நிச்சயம் இறைன்புபை பற்றிய பிறரது எண்ணம் நிச்சயம் மலைப்பைதான் ஏற்படுத்தும்

  English summary
  Tamilnadu Chief Secretary iraianbu ias takes good decision for his books; Appreciated by the authorities. he said please do not buy my books to schools and library in my last date of job career.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X