சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபாச வீடியோ பார்த்துட்டீங்களா.. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. கூடுதல் டிஜிபி ரவி விளக்கம்

ஆபாச வீடியோ பதிவிறக்கம் செய்தால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆபாச வீடியோக்களை பகிர்ந்து தொடர்பாக மேலும் பலர் கைதாக வாய்ப்பு ?

    சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். அதே சமயம், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, டவுன்லோடு செய்தாலோ, ஷேர் செய்தாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாயும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி சில தினங்களுக்கு முன்பு, ''குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம்.

    ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான். 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

    பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

     கண்காணிப்பு பணி

    கண்காணிப்பு பணி

    பின்னர், பாலியல் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் போலீசாருடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் இந்த கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்படி சிக்கியவர்தான் திருச்சியை சேர்ந்த 42 வயது கிறிஸ்டோபர் அல்போன்ஸ்.. பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர்.. ஐடிஐ படித்து விட்டு ஏசி மெக்கானிக்காக நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார்.

     கிறிஸ்டோபர்

    கிறிஸ்டோபர்

    ஏற்கனவே நெல்லை இளைஞரை ஆபாச வீடியோ பார்த்ததாக போலீஸ்காரரை போல ஒருவர் மிரட்டினார். அப்போதே கூடுதல் டிஜிபி ரவி, "ஆபாச படம் பார்த்தவர்களை இப்படி போனில் எல்லாம் கூப்பிட்டு மிரட்ட மாட்டோம்" என்று விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து நெல்லை இளைஞரை மிரட்டிய அந்த நபரும் கைதானார்.

    விளக்கம்

    விளக்கம்

    இப்போது, அடுத்த அதிரடியாகதான் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் கைது நடந்துள்ளது.. அடுத்தடுத்து ஆபாச வீடியோ குறித்த செய்திகள் வெளியாகி வருவதால் ஒருவித பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கும் ஏடிஜிபி ரவி விளக்கம் அளித்துள்ளார். அதில், "நிலவன் ஆதவன் என்ற போலி கணக்கின்மூலம் ஃபேஸ்புக்கில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். திருச்சியில் இதுவரை 3 போலி கணக்குகள் மூலம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தெரியவந்துள்ளது.

     கண்காணிப்பு

    கண்காணிப்பு

    பல போலி பெயர்களில் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்டோபர் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அதனால் தொடர்ந்து தனிகுழு மூலம் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.. இதன்பிறகுதான் அவரை கைது செய்துள்ளோம்.. ஆனால் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம்.. அதே சமயம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, டவுன்லோடு செய்தாலோ, ஷேர் செய்தாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாயும்" என்றார்.

    English summary
    child pornogrophy issue: Don't be afraid of those who watch porn says ADGP Ravi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X