• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பறவைகள் பற்றி பலனுள்ள கலந்துரையாடல்.. லாக்டவுனில் முடங்கியுள்ள குழந்தைகளுக்கு குஷி தகவல்

|

சென்னை: லாக்டவுன் நீடிப்பு காரணமாக, 20 நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருப்பீர்கள். சாப்பிடுவது தூங்குவது.. அல்லது தூங்கிவிட்டு சாப்பிடுவது.. இப்படி இரண்டு வகையான செயல்களை மட்டும், மாற்றி மாற்றி செய்து செம கடுப்பாக இருப்பீர்கள். உங்களுக்கே இப்படி என்றால், ஓடியாடி திரியக்கூடிய குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது கிடையாது.

அதெல்லாம் தெரியுதுங்க.. டிவி பார்ப்பது, செல்போனில் கேம் ஆடுவது இதை தவிர்த்து குழந்தைகளுக்கு வேறு என்னதான் பொழுது போக்கு இருக்கிறது.. அதை சொல்லுங்க பாஸ், என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

Children can get details on birds via zoom meeting

ஓவியங்கள் வரைவது, அல்லது அடுத்த வகுப்பு பாடத்தை இப்போதே படியுங்கள் என்பது போன்ற வழக்கமான ஸ்டீரியோடைப் பதிலை நாங்கள் சொல்லப் போவது கிடையாது. இதையும் தாண்டி மேலும் பல்வேறு விஷயங்கள், நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாம்தான் கவனிக்கத் தவறுகிறோம். அப்படியான ஒரு விஷயம்தான், பறவைகள் பற்றி அறிந்து கொள்ளவும், அன்பு செய்யவும், குழந்தைகளுக்கு கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு.

பொதிகைச் சாரல் என்ற அமைப்பு இப்படியான ஒரு முன்னெடுப்பை நடத்திவருகிறது. வழக்கமாக, குழந்தைகள், பெற்றோர்களை பறவை சரணாலயங்களுக்கு, நேரிலேயே அழைத்துச்சென்று நிறைய விளக்கங்கள் கொடுப்பது இந்த அமைப்பின் பணியாக இருந்து வந்தது.

சமீபத்தில்கூட இப்படியாக பள்ளிக்கரணை பகுதிக்கு குழந்தைகள் மட்டும் பெற்றோரை அழைத்து சென்று, பறவைகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். பறவைகள் நல ஆர்வலர் அரவிந்தன் பறவைகள் குறித்து, விளக்கம் கொடுத்து அவர்களின் ஆர்வத்தை தூண்டினார்.

Children can get details on birds via zoom meeting

இப்போது லாக்டவுன் நடைமுறையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், வீட்டிலிருந்தபடியே பயனுள்ள வகையில், பறவைகள் தொடர்பாக குழந்தைகள் அறிந்து கொள்ளும் ஏற்பாட்டை, பொதிகைச் சாரல் அமைப்பு செய்து உள்ளது. பறவைகள் நல ஆர்வலர்கள் ரவிந்திரன் இதுபோன்ற ஒரு கலந்துரையாடலை செய்கிறார்.

Zoom ஆப்பில், https://us04web.zoom.us/j/803393614 இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். அந்த கலந்துரையாடலுக்கான ஐடி எண்: 803 393 614 இதைக் கொடுத்து உள்ளே நுழையுங்கள். இந்த கலந்துரையாடலுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

தினமும் இரவு 7 மணி முதல் சுமார் 40 நிமிடங்களுக்கு இந்த கலந்துரையாடல் நடக்கிறது. குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு பறவையினங்கள் பற்றி ரவீந்திரன் மிகவும் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார். குழந்தைகள் தங்களுடைய கேள்விகளை அப்போதே கூட கேட்டுக் கொள்ளலாம். அல்லது, இதற்காக உள்ள வாட்ஸப் குழுவில் (குழுவில் இணைய தொடர்பு கொள்ள - வாட்ஸ் அப் எண் 9962086565) இணைந்து கொண்டு கூட, தங்கள் கேள்விகளை கேட்கலாம்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Children can get details on birds, while stuck in the lockdown period, here is the zoom app link.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more