சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகையே உருட்டி மிரட்டும் கொரோனா.. சாதா சளி, இருமல்தான்.. நடுங்கும் நாடுகள்.. உச்சகட்ட அலர்ட்!

கரேனா வைரஸ் நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

    சென்னை: கொரோனா வைரஸ்.. உலக நாடுகளை உருட்டி மிரட்டி கொண்டிருக்கும் கொடிய நோய் இது.. சீனாவில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும், தமிழகத்தில் எந்த காரணத்தை கொண்டும் இது பரவி விடக்கூடாது என்பதில் மிக தீவிரமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஆரம்பமாகி உள்ளன.

    18 வருஷத்துக்கு முன்பு சத்தமில்லாவில் சீனாவில் நுழைந்தது சார்ஸ் என்னும் கொடிய நோய்.. இது பின்னர் உலகம் முழுக்க பரவி பலரது உயிரை காவு வாங்கிவிட்டது. இந்த வைரஸ் நோயால் மட்டும், 800 பேர் உயிரிழந்த கொடுமை நடந்தது.

    அப்படித்தான் இன்னொரு வைரசும் இதே சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது.. வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது என்று மட்டும் தெரிகிறது.. ஆனால் இதை பற்றி முழுமையாக அறிய முடியவில்லை என்றாலும் மிக கொடுமையானது என்று சொல்கிறார்கள். இதற்கு கொரோனா வைரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி

    அபாயம்

    அபாயம்

    சாதாரண மூச்சு பிரச்சனையை போலதான் அறிகுறி இருக்கும்.. சளி, இருமல்தான் முக்கிய அறிகுறிகள் என்றாலும் பாதிப்போ உயிரை கொல்லும் அபாயத்தை உடையது.. சீனாவிற்கு ஒரு நாளைக்கு ஏராளமானோர் பல்வேறு நாடுகளில் இருந்து செல்கிறார்கள்.. சீனாவில் இருந்தும் ஏராளமானோர் பிற நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்கள். அதனால் உலக அளவிலேயே இந்த கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பயணிகள்

    பயணிகள்

    இந்த வைரஸ் எப்படி பரவுகிறது, அது எப்படி இருக்கும்? இதை தடுக்க என்ன மருந்து இது எதுவுமே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆனால் அதற்குள் 50 பேர் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிறார்கள். இவர்கள் எல்லோருமே சீனாவில் இருந்து திரும்பிய பயணிகள் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி!

    தொற்று நோய்

    தொற்று நோய்

    இந்த வைரஸ் டைரக்டாக நுரையீரலை தாக்கி.. நிமோனியா காய்ச்சலில் கொண்டு போய் விட்டுவிடுமாம்.. வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலும், தும்மினாலும், சளியை துப்பினாலும், அதில்கூட வைரஸ் காற்றில் கலந்துவிடுமாம்.. அதை சுவாசித்தால் மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளுமாம்.

    சுகாதார அமைச்சகம்

    சுகாதார அமைச்சகம்

    அதற்காகத்தான், சீனா நாட்டிற்கு சென்று திரும்புகின்றவர்கள், சீனாவிலிருந்து திரும்ப வருகின்ற பயணியர்களுக்கு டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களின் ஏர்போர்ட்டுகளில் மெடிக்கல் செக்-அப்களை மிக தீவிரமாக செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கின்றது. இதேபோல் சீனா செல்லும் இந்தியர்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொரோனா

    கொரோனா

    மேலும் தமிழகத்தில் 'கொரோனா' வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். "எப்பவுமே தொற்று நோய் நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கும்.. நிப்பா, எபோலா போன்ற வைரஸ் பாதிப்புகளின் போதுகூட, இப்படித்தான் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்" என்று விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

    பரிசோதனை

    பரிசோதனை

    இதனையடுத்து, அதற்கான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு விரைந்து ஈடுபட்டு வருகிறது.. நேற்று முதல் கோவை, சென்னை உள்ளிட்ட பல ஏர்போர்ட்களில் பயணிகளுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    English summary
    China Corona virus infection: hightly alert in tn airports and health minister says no need to panic
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X