சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கல்வானில் காலூன்றி விட்டதே சீனா.. நீங்க என்ன பண்ண போறீங்க".. பிரதமருக்கு ப.சி.யின் 10 கேள்விகள்

ப. சிதம்பரம் சில கேள்விகள் கேட்டு ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "20 வீரர்கள் உயிரிழந்த பிறகுதான் தங்கள் மெளனம் கலைந்தது.. இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?, கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்" என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்" என்று ப.சிதம்பரம் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.. மேலும் இன்றைய தினம் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்விகளுக்கு எல்லாம் பிரதமர் மோடி பதில் தர வேண்டும் என்று தெரிவித்து, சில கேள்விகளையும் ப.சிதம்பரம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சீன-இந்தியா எல்லை பிரச்சனை விஸ்வரூபமெடுத்தள்ளது.. இரு நாட்டுக்கும் உறவில் விரிசல் வந்துள்ளது.. இந்தியாவை போலவே, சீன நாட்டிலுமே ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது... தற்போது இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என சீனா சொல்லி உள்ளது.

 china india: congress senior leader p chidambaram tweeted about china india issue

இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது... வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதேசமயம், இந்த கூட்டத்திற்கு ராஷ்டீரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு அழைப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியா சீனா எல்லைப்பதற்றம்: வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்கள் ரிலீஸ் இந்தியா சீனா எல்லைப்பதற்றம்: வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்கள் ரிலீஸ்

இந்த கூட்டம் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சி தலைவர்களிடம் பிரதமர் மோடி சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த கேள்விகள் இவைதான்:

"அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் போது கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பிரதமர் திரு மோடி பதில் அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்"

"இந்திய நிலப்பரப்பில் சீனா ஊடுருவிய போது, உளவு அமைப்பு அதனை கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?"

"20 வீரர்கள் உயிரிழந்த பிறகுதான் தங்கள் மெளனம் கலைந்தது; இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?"

"மே மாதம் 5ஆம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் திரு ஜீ யைத் தொடர்பு கொண்டீர்களா?"

"சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?"

"ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?"

"இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மௌனம் கலைந்தது, இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?"

"கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்" என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

"ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?'" என்று கேட்டுள்ளார்.

English summary
china india: congress senior leader p chidambaram tweeted about china india issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X