சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயம் செய்த ஜி ஜின்பிங் நாட்டுக்கு அதிபரானது எப்படி?

Google Oneindia Tamil News

Recommended Video

    Xi Jinping Biography in Tamil | விவசாயம் செய்த ஜி ஜின்பிங் நாட்டுக்கு அதிபரானது எப்படி?-வீடியோ

    சென்னை: தமிழக முழுவதும் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் ஜி ஜின்பிங். பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக இந்தியா வந்திருக்கிறார் அவர்.

    இந்திய ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக உள்ள அவர், அமெரிக்காவுக்கு மிகப்பெரும் சவாலாகவும், உலகின் தனிப்பெரும் தலைவராகவும் மெல்ல உருவெடுத்து வருகிறார்.

    தந்தை அரசியலில் ஈடுபட்டதால் ஜி ஜின்பிங்கிற்கும் இளம் வயது முதலே அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது.

    கமகம சாம்பார்.. சுடச் சுட சுவையான தக்காளி ரசம்.. மெய் மறக்கப் போகிறார் ஜிங்பிங்!கமகம சாம்பார்.. சுடச் சுட சுவையான தக்காளி ரசம்.. மெய் மறக்கப் போகிறார் ஜிங்பிங்!

    விவசாயி

    விவசாயி

    ஜி ஜின்பிங்கிற்கு விவசாயம் மீது எப்போதுமே அளவு கடந்த காதல் உண்டு. ஏனென்றால், தொடக்கக்காலத்தில் அவர் விவசாயம் செய்தவர். அதனால் விவசாயத்தொழிலில் உள்ள சிரமங்களை மறக்காமல் ராணுவம் மற்றும் உற்பத்தித்துறைக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். ஜின்பிங்கோடு பிறந்தது இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி. அவர்களில், ஜின்பிங்கிற்கு மட்டுமே தனது தந்தை ஜி ஜாங்சன் போல் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்தவர் ஜி ஜின்பிங்கின் தந்தை ஜி ஜாங்ஸன். அவர் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் மனம் தளராத ஜி ஜின்பிங் அதே கட்சியில் இணைந்து படிப்படியாக உயர்ந்து இன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். எந்த கட்சி தனது தந்தையை நீக்கியதோ அதே கட்சியை பின்னாளில் நிர்வகிக்கும் வாய்ப்பு ஜி ஜின்பிங்கிற்கு கிட்டியுள்ளது.

    துணை அதிபர்

    துணை அதிபர்

    ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் பிடித்த விளையாட்டு கால்பந்தாட்டம். இதனால் சீனப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கால்பந்தாட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாசே துங்குக்கு நிகராக தனது திறமைகளை வளர்த்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர் ஜி ஜின்பிங். பியுஜியான் மாகாண ஆளுநராக இருந்த அவர், கடந்த 2008-ம் ஆண்டு சீன துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    2013-ம் ஆண்டு மார்ச் மாதம் சீன அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜி ஜின்பிங் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். இதனால் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவந்தார். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை சீன மக்கள் மத்தியில் ஜி ஜின்பிங்கிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. அதனால் அவர் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறார்.

    English summary
    china president xi jinping doing agriculture in his early stages
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X