சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய படை.. அரண் போல காக்கிறார்கள்.. இந்திய வீரர்கள் செம மாஸ்.. அசந்து போன சீன ராணுவ நிபுணர்!

Google Oneindia Tamil News

சென்னை: உலகிலேயே இந்தியாதான் மிக சிறந்த ராணுவ படையை கொண்டு இருக்கிறது என்று சீனாவை சேர்ந்த முக்கியமான ராணுவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையிலான பிரச்சனை எப்போது முடிவிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையிலான தீவிரமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதல் கட்டமாக இந்திய ராணுவ லெப்டினட் ஜெனரல் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் இடையே கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் இன்னும் லடாக் அருகே இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா இன்னும் படைகளை திரும்ப பெறவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆம்.. இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்தது உண்மை.. ஆனால்.. சொல்வது லடாக் பாஜக எம்.பி. ஆம்.. இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்தது உண்மை.. ஆனால்.. சொல்வது லடாக் பாஜக எம்.பி.

ராணுவ நிபுணர் சொன்னார்

ராணுவ நிபுணர் சொன்னார்

இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ராணுவ நிபுணர் மற்றும் சீன ராணுவத்தின் ஆலோசகர்களின் ஒருவரான ஹுயாங் கௌசி தெரிவித்துள்ளார். அதில், உலகிலேயே இந்தியாதான் மிக சிறந்த ராணுவ படையை கொண்டு இருக்கிறது. திபெத் எல்லையில் மிக சிறப்பான மலை படைகளை கொண்டு இருக்கிறது. உலகில் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவை விட இந்தியாதான் சிறப்பான மலை ராணுவ படையை கொண்டு உள்ளது.

சிறப்பான பாதுகாப்பு படை

சிறப்பான பாதுகாப்பு படை

இந்தியாவில் மலைகளில் சிறப்பான பாதுகாப்பு படையை கொண்டு இருக்கிறது. மொத்தம் 12 படை பிரிவுகளை கொண்டு உள்ளது. 200,000 படை வீரர்கள் இதில் இருக்கிறார்கள். உலகில் எங்கும் இவ்வளவு பெரிய படை இல்லை. இதனால் இந்தியாவின் மலை பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. 1970ல் இந்திய ராணுவம் தனது படை பிரிவை பலப்படுத்தி வருகிறது.

அதிக வீரர்கள்

அதிக வீரர்கள்

முக்கியமாக தனது மலை பாதுகாப்பு படைவிரிவை பலப்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா தனது mountain strike force எனப்படும் மலை தாக்குதல் படையை அதிகரிக்க உள்ளது. மொத்தம் 50,000 படைகளை களமிறக்க உள்ளது. இந்திய எல்லையில் இருக்கும் மலைகள் குறித்து இந்த வீரர்களுக்கு தெரிந்து இருக்கிறது. மலைகளின் அனைத்து பகுதிகளையும் இவர்கள் கரைத்து குடித்துள்ளனர்.

பயிற்சி மையங்கள்

பயிற்சி மையங்கள்

எல்லா வீரர்களுக்கும் சிறப்பான மலை ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக இவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலை பகுதிகளில் ராணுவ தளவாடங்களை இந்தியா சிறப்பாக அமைத்து இருக்கிறது. சியாச்சின் கிளேசியர் பகுதியில் இந்தியா பெரிய படையை அமைத்து உள்ளது.

சியாச்சின் கிளேசியர்

சியாச்சின் கிளேசியர்

இந்த படை பூமியில் இருந்து 5000 கிமீ உயரத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 7000 படை வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் 6749 மீட்டர் உயரத்தில் கூட ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு நவீன ஆயுதங்களை கூட இவர்கள் வைத்து இருக்கிறார்கள். இந்த மலை ராணுவ படையிடம் அதிக அளவில் விமானங்கள் இருக்கிறது. விமானப்படை மட்டுமின்றி, தனியாக இவர்களிடம் விமானங்கள் இருக்கிறது. இது அவர்களுக்கு கூடுதல் பலம் அளிக்கிறது, என்று அவர் கூறியுள்ளார்.

English summary
China Standoff with India: India has the best mountain troops says Chinese Expert.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X