சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது கண்காணிப்பு பணிகளை இந்திய கடற்படை தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் தீவிரமான பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றம் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கலாம் என்று கூறுகிறார்கள். லடாக்கில் தொடர்ந்து சீனா படைகளை குவித்து வருகிறது.

முக்கியமாக கல்வான், டெப்சாங், பாங்காங் திசா பகுதிகளில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அந்த பகுதியில்தான் பதற்றம் அதிகரித்து வருகிறது.

 அந்த அந்த "423 மீட்டர்".. கால்வானில் சீனா செய்த தந்திரம்.. லீக்கான பகீர் புகைப்படங்கள்.. என்ன நடந்தது?

எப்படி வரும்

எப்படி வரும்

அதிலும் அங்கே போர் விமானங்களை சீனா அதிக அளவில் குவித்து வருகிறது. இதனால் ஒருவேளை போர் வந்தால் அது பெரும்பாலும் வான் வெளி பகுதியில் நடக்கும் போராகவே இருக்கும் என்கிறார்கள். அதாவது இரண்டு ராணுவத்திற்கு இடையிலான விமானப்படை ரீதியிலான போராக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதற்காகவே இந்தியா ரஷ்யாவில் இருந்து அவசரமாக 33 போர் விமானங்களை வாங்குகிறது.

கடல் எப்படி

கடல் எப்படி

ஆனால் சீனாவை நம்ப முடியாது. இந்தியாவை கடல் பகுதியில் கூட சீனா தக்க வாய்ப்புள்ளது. உலக முழுக்க சீன கடல் பகுதியில் அத்துமீறி வருகிறது. கோரிய தீபகற்பம் தொடங்கி ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் கடல் பகுதிகளில் கூட சீனாவின் போர் கப்பற்படை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென் சீன கடல் எல்லை, கிழக்கு சீன கடல் எல்லையிலும் கூட சீனா அத்துமீறி வருகிறது.

கடுமையான மோதல்

கடுமையான மோதல்

அதிலும் சீனாவின் போர் கப்பல்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, வியட்நாம் என்று பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் இந்திய கடல் எல்லையிலும் சீனா பல நாட்களாக கண்வைத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்திய பெருங்கடலிலும், வங்க கடலிலும் சீனாவின் போர் கப்பல்கள் எல்லை மீற வாய்ப்புள்ளது. எப்போது இந்திய பெருங்கடலை பிடிக்கலாம் என்று சீனா தீவிரமாக துடித்துக் கொண்டு இருக்கிறது.

அதிகரித்தது

அதிகரித்தது

இந்த நிலையில்தான் இந்தியாவின் போர் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் தீவிரமாக ரோந்து பணிகள் செய்து வருகிறது. முன்பை விட தற்போது தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் இந்தியாவின் ஐஎன்எஸ் ரானா மற்றும் ஐஎன்எஸ் குலிஷ் போர் கப்பல்கள் தீவிர ரோந்து பணிகளை செய்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து கோஸ்ட் கார்ட் சிறிய சிறிய ஜெட் போட்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

சீனா எங்கே

சீனா எங்கே

சீனாவின் கப்பல்கள் எங்கே இருக்கிறது. எங்காவது அத்துமீறுகிறதா, இந்தியா உள்ளே வர முயற்சி செய்கிறதா என்று தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய கடற்படையிடம் இருக்கும் போர் விமானங்களும் வானத்தில் சென்று கடல் மேலே ரோந்து பணிகளை செய்கிறது . அதேபோல் நவீன சோனார் தொழில்நுட்பம் மூலம் நீர்முழ்கி போர் கப்பல்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிற்கு உதவி

இந்தியாவிற்கு உதவி

இந்தியாவின் கடற்படைக்கு எப்போது வேண்டுமானாலும் உலக நாடுகள் உதவும் நிலையிலும் இருக்கிறது. இந்தியாவுடன் கடந்த சனிக்கிழமைதான் ஜப்பானின் போர் கப்பல்கள் இணைந்து போர் பயிற்சி செய்தது. அதோடு இந்தியாவோடு இணைந்து போர் பயிற்சி செய்ய ஆஸ்திரேலியா, பிரான்ஸ் கப்பல்கள் தயாராக இருக்கிறது. இதெல்லாம் போக அமெரிக்கா போர் கப்பல்கள் தென் சீன கடல் எல்லையில்தான் இருக்கிறது என்பதும் இந்தியாவிற்கு கூடுதல் பலம்.

English summary
China standoff with India: Navy is strengthened it's patrolling in the Indian ocean today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X