சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் புகார்… டுவிட்டரை தட்டிவிட்டு பரபரப்பை கிளப்பிய சின்மயி

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி மீண்டும் புகார்- வீடியோ

    சென்னை:வைரமுத்து மீது பெண்களுக்கான தேசிய கவுன்சிலில் பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார்.

    மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் திரையுலகத்தில் பெரும் சர்ச்சையானது.

    தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீ டூ புகார்கள் வந்தன.இது போன்ற புகார்களால் கடும் சர்ச்சைக்கு சின்மயி உள்ளானார்.

    தொடர்ச்சியாக வைரமுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவருடைய பேச்சை வைத்து தமது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி விமர்சித்து வந்தார். இந்நிலையில் முதன்முறையாக வைரமுத்து மீது பெண்களுக்கான தேசிய கவுன்சிலில் புகார் அளித்துள்ளார் சின்மயி.

    சாலையில் போராட்டம்... வானில் கருப்பு பலூன்கள்... மோடிக்கு எதிராக மாஸ் காட்டிய மதிமுக சாலையில் போராட்டம்... வானில் கருப்பு பலூன்கள்... மோடிக்கு எதிராக மாஸ் காட்டிய மதிமுக

    புகார் பதிவு

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    பெண்களுக்கான தேசிய கவுன்சிலில் வைரமுத்துவுக்கு எதிராக நான் புகார் பதிவு செய்துள்ளேன். சட்டப்பூர்வமான ஒரே சரியான வழி இது மட்டும் தான்.

    தடை நீடிக்கிறது

    இப்பிரச்சினைக்கு சரியான தீர்வை தர கவுன்சிலை சேர்ந்த மேனகா காந்தி எனக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் என் மீதான தடை தொடர்கிறது.

    கடிதம் அனுப்பினேன்

    விஷாலுக்கு நான் பல மாதங்களுக்கு முன்னரே கடிதம் அனுப்பி விட்டேன். அவர் என்ன முயற்சித்தும், அவரது சங்கம் டப்பிங் சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடமுடியாது என்று தெரிகிறது. விஷாலின் முயற்சிக்கு மிக்க நன்றி.

    ராதாரவி பேச்சு

    டப்பிங் யூனியனின் தலைவர் ராதாரவி, நீதிமன்றத்தில் என்னை அடுத்த சில வாரங்களில் சட்ட ரீதியாக சந்திக்க இருக்கிறார். அதோடு, உங்கள் பார்வைக்கு முன் ராதாரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தொடர்ந்து என்னைப் பற்றி மோசமாகப் பேசி அவமதித்துக் கொண்டிருக்கின்றனர். என்னை வாழ்த்துங்கள் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

    English summary
    Chinmayi has filed a complaint against Vairamuthu at the National Council for Women.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X