• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஷாக்.. சுருக்கு மாட்டியவுடன் துடிதுடித்த சித்ரா.. கழுத்திலும் காயமாம்.. வெளியான பகீர் தகவல்!

|

சென்னை: சித்ரா தூக்கில் தொங்கிய உடனேயே, துடிதுடித்து போயுள்ளார் என்றும், அதனாலேயே அவருடைய கழுத்துக்கு பின்புறம் காயங்கள் இருந்ததாகவும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

  Chitra-வின் பின்பக்க கழுத்திலும் காயங்கள் | Tamil FilmiBeat

  சித்ரா மரணத்துக்கு இன்னும் ஒரு விடிவும் கிடைக்கவில்லை.. முடிவும் கிடைக்கவில்லை.. சந்தேகங்களும், மரணங்களும்தான் தினம் தினம் வெடித்து வருகிறது.

  சித்ராவின் தரப்பு ஹேமந்த்தையே முன்னிறுத்தி குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப சில சந்தேகங்களுக்கு நமக்கு விடையே கிடைக்காமல் உள்ளது.

  மார்பு

  மார்பு

  சித்ரா முகத்தில் காயம், சித்ராவின் மார்பிலும் காயம், சித்ரா குளிக்கும்போது, ஹேமந்த் ஏன் வெளியே சென்றார்? சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கஞ்சா இருந்ததா? அந்த ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகள் எங்கே? 6 நாட்களுக்கு பிறகு ஹேமந்த் கைதானது ஏன்? சித்ரா தற்கொலை செய்து கொண்டால், நாக்கு வெளியே தள்ளப்பட்டிருக்குமே? தழும்பு ஏதாவது கழுத்து பகுதியில் இருந்திருக்குமே? என்ற பல கேள்விகள் நமக்கு முன் எழுகின்றன.

  தோழிகள்

  தோழிகள்

  இதனிடையே, சித்ரா தரப்பு நண்பர்கள், தோழிகள், உதவியாளர்கள் என பலரும் நித்தம் ஒரு தகவல்களை தெரிவித்து வருவதால், இந்த வழக்கின் போக்கு சரியான திசையில்தான் செல்கிறதா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் உடல் ஏற்கனவே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், போஸ்ட் மார்ட்டம் செய்த மெடிக்கல் டீமில் இருந்த சிலர் ஒரு தனியார் செய்தி புலனாய்வு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

  காயங்கள்

  காயங்கள்

  அந்த தகவலில் "சித்ரா மரணத்துக்கு பிறகு 2வது நாளில் அந்த ரூமுக்குள் சென்றோம்.. ஆய்வு செய்தோம்.. தற்கொலைதான் செய்து கொண்டிருக்கிறார்... அவரது கழுத்தின் முன்புறத்தில் தழும்புகள் இல்லை... ஆனால், கழுத்தின் பின்பக்கம் அந்த துணியை இறுக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன.. அவர் கழுத்தில் சுருக்கு மாட்டி கொண்டபிறகு துடிதுடித்துள்ளார்.. அந்த சமயம், தன்னை விடுவிக்கவும் முயற்சித்திருக்கலாம்... அதனால்தான் அந்த நகங்கள் அவரது முகத்தை கிழித்து உள்ளன" என்று கூறியுள்ளனர்.

  ஹேமந்த்

  ஹேமந்த்

  சம்பவத்தன்று, ஹேமந்த் - சித்ரா இடையே சண்டை நடந்து, 'செத்து போ' என்று சொன்னதாலும், போதை பழக்கத்தின் விளைவாகவும்கூட இந்த முடிவை சித்ரா எடுத்திருக்கலாம் என்கிறது ஒரு தரப்பு.. சித்ராவை அடித்து தொங்கவிட்டு, அதன்பிறகு ஹேமந்த் ரூமை விட்டு சென்றுள்ளார் என்கிறது இன்னொரு தரப்பு..

   பின்பக்க கழுத்து

  பின்பக்க கழுத்து

  சித்ரா இறந்த போட்டோவை பார்த்தவர்கள் எல்லாரும், அவரது முன்பக்க கழுத்தைப் பார்த்து தூக்கு போட்டுக்கொண்ட காயம் எதுவும் காணப்படவில்லை என்றார்கள். ஆனால் அவரது பின்பக்க கழுத்தில் அவர் தூக்கு மாட்டிக்கொண்ட வடு இருந்தது என்று புதுதகவல் வெளியாகி உள்ளது..

   போதை பொருட்கள்

  போதை பொருட்கள்

  இதில் இன்னொரு விஷயமும் சந்தேகத்தை கிளப்புகிறது.. சித்ரா சாகும்போது போதைப் பொருட்களை உபயோகப்படுத்தினாரா என்ற டெஸ்ட்டும் நடந்து வருகிறதாம்.. அது வந்த பிறகுதான் சித்ராவின் போதைப் பழக்கத்தை பற்றித் தெளிவாக சொல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. ஒருவேளை சித்ரா ஹேண்ட்பேக்கில் போதை பொருட்கள் இருந்தால், அதை யார் சப்ளை செய்தது? என்ற அடுத்த கேள்வியும் எழுகிறது.

   நீடிக்கும் மர்மம்

  நீடிக்கும் மர்மம்

  தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. அந்த வழக்குகளின் போக்கும் ஒரு கட்டத்திற்கு பிறகு என்ன ஆனது என்றே தெரியாமலும் போய்விடும்.. ஆனால், சித்ரா மரணம்தான் இத்தனை மர்ம முடிச்சுக்களுடன் நீண்ட காலம் நீடித்து வருகிறது.. தற்கொலை செய்து கொண்டார் என்றே ஏற்று கொண்டாலும், அதற்கான காரணம்தான் என்னவென்று தெரியாமல் சித்ராவின் ரசிகர்களை உலுக்கி எடுத்து வருகிறது!

   
   
   
  English summary
  Chitra case and police investigation is going on it
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X