சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சித்ராவை "குதறிய" ஹேமந்த்.. ரோகித் சொல்வது உண்மையா.. பகீர் கிளப்பும் அதிகாரி

சித்ரா மரணம் தொடர்பான ஆடியோ குறித்து முன்னாள் அதிகாரி சந்தேகம் கிளப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேமந்த்துக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அவரது நண்பர் ரோகித் என்பவர் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்நிலையில், சித்ராவின் மரண வழக்கை திசை திருப்பவே இதுபோன்ற நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்று முன்னாள் சிபிஐ இயக்குனர் ரகோத்தமன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக சித்ராவின் வழக்கு சூடு பிடித்து வருகிறது.. இதற்கு காரணம், ஹேமந்த்தின் நண்பர் ரோகித் என்பவர்... ஹேமந்த்துக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.. அதற்கு ஆதாரமாக ஹேமந்த்துடன் பேசும் ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆடியோ வழக்கில் முக்கிய திருப்பு முனையாக இருந்து வருகிறது.. அதேசமயம், பல்வேறு குழப்பங்களையும் கடந்த 2 நாட்களாகவே ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு ஒரு முடிவு தெரிவதற்குள் இன்னொரு ஆடியோ நேற்று மாலை வெளியாகி உள்ளது.. அந்த ஆடியோவையும் ரோகித்தான் கசிய விட்டுள்ளார்.. அது ஹேமந்தின் அப்பாவிடம் பேசும் ஆடியோ ஆகும்.

 ரத்த காயம்

ரத்த காயம்

அதில், "அங்கிள் நான் இன்னிக்கு வரைக்கும் வாயே திறக்காம இருக்கேன்.. ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசக்கூடாது.. ஹேமந்த் என்ன பண்ணிட்டு இருந்தான், அந்த பொண்ணை எப்படி டார்ச்சர் பண்ணான்,எவ்ளோ அடிப்பான், எத்தனை முறை வீட்டை விட்டு ஓடியிருக்கு, எத்தனை ரத்த காயத்துடன் அடிச்சிருக்கான்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.. ஆனால், அந்த பொண்ணை பத்தி தப்பா வெளியே வரக்கூடாது.

ஹேமந்த்

ஹேமந்த்

சித்துவுக்கு குடிப்பழக்கம் இருக்குன்னு சொல்றீங்களே? அந்த பொண்ணு குடிக்காது.. ஹேமந்த் ஒழுங்கு கிடையாது.. அவன்கூட இருந்தவன் நான்.. அவன் இதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுங்ககூட சுத்தியிருக்கான்? எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்திருக்கான் தெரியுமா? 3 பேர்கூட பழக்கம் இருக்குன்னு நீங்கதானே சித்து பத்தி மீடியாவில் சொன்னீங்க.. உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, உங்க பையன் ஒழுங்கா? சித்து ஒயின் தவிர எதையுமே சாப்பிட மாட்டாள்" என்கிறார்.

 2 ஆடியோக்கள்

2 ஆடியோக்கள்

இந்த 2 ஆடியோக்களை தவிர, வேறு சில தனியார் டிவி நிகழ்ச்சிகளிலும் ரோகித் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டிகளிலும், சித்ராவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.. அதேசமயம், ஹேமந்த் கெட்டவன், மோசமாசவன், பல பெண்களை சீரழித்தவன், கண்மூடித்தனமாக தாக்க கூடியவன், மோசடி பேர்வழி என்பது போலவும் சொல்லி உள்ளார். இவ்வளவும் ரோகித் சொல்லவும், ஹேமந்த்துக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்யவும், ஒருவழியாக சித்ராவின் மரணத்தில் நீதி கிடைக்கப்பட்டு விடும் என்று நம்பப்படுகிறது.

சிக்கல்

சிக்கல்

ஆனால் அதுதான் இல்லை.. இனிதான் சிக்கலே.. ரோகித் வெளியிட்ட அந்த ஆடியோ குறித்து, சித்ராவின் ரசிகர்கள் தெரிவித்த சில சந்தேகங்களை, நேற்றே நாம் பதிவிட்டிருந்தோம்.. இப்போதும் அதே சந்தேகத்தைதான் ஓய்வு பெற்ற சிபிஐ இயக்குனர் ரகோத்தமனும் கேள்வியாக எழுப்பி உள்ளார்.. இந்த அதிகாரிதான், சித்ரா தற்கொலை செய்த அன்று, ஹேமந்த் ஏன் சித்ரா குளிக்கும்போது வெளியே சென்றார்? என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியிருந்தவர்.

ஹைகோர்ட்

ஹைகோர்ட்

இப்போதும் அந்த ஆடியோ குறித்த விஷயங்களை ஒரு தனியார் டிவிக்கு பேட்டியாக தந்துள்ளார்.. அதில் அவர் சொன்னதாவது: "யார் இந்த ரோகித்? இவ்வளவு காலம் எங்கிருந்தார்? திடீரென ஆடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்? எதற்காக ஹைகோர்ட்டில் போய் கேஸ் போடுகிறார்? முதல்ல போலீசுக்குதானே போகணும்? போலீஸ்தானே இந்த வழக்கை விசாரித்து வருகிறது? ஒருவேளை போலீஸ் இவரது ஆதாரத்தை ஏற்க மறுத்தால்தானே ஹைகோர்ட்டுக்கு சென்றிருக்க வேண்டும்? இவர் யார் ஹேமந்த்துக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சொல்வதற்கு? இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆடியோ

ஆடியோ

அந்த ஆடியோவை கேட்டால், அப்படி ஒரு ஆதாரமும் இருப்பதாக தெரியவே இல்லை.. முழுக்க முழுக்க தன்னை ஒரு குற்றமற்றவர் போல சித்தரித்து பேசுகிறார் ஹேமந்த்.. கடைசிவரை இதை தற்கொலையாகவே சொல்கிறார்? அந்த ரூமில் என்ன நடந்தது என்பதுதான் முக்கியம், அதை சொல்லியிருந்தால்தானே அது ஆதாரம்? அதைதான் ஹேமந்த் சொல்லவே இல்லையே.. ஹேமந்த் யார் கேட்டாலும் சொல்லவும் மாட்டார்.. முழுக்க முழுக்க சித்ராவின் அம்மாவையே குற்றவாளியாக சித்தரிக்க நண்பர்கள் இருவருமே முனைகிறார்கள்.

சந்தேகம்

சந்தேகம்

ரோகித் மனு தாக்கல் செய்தாலும், அதை ஹைகோர்ட் ஏற்றிருக்க கூடாது.. இங்கே வந்து ஏன் ஆதாரம் தரணும்? நேராக போலீஸிடம் போயிருக்கலாமே என்று கேட்டிருக்கலாம்.. ஒருவேளை போலீஸார் மீது சந்தேகம் இருந்தால், ஆதாரத்தை எடுத்து கொண்டு கமிஷனரிடமே ரோகித் போயிருக்க வேண்டும்.. இதுதான் முறை.. அதைவிட்டுவிட்டு, "நீ வெளியே வந்துடு பார்த்துக்கலாம்" என்று ரோகித் ஹேமந்த்திடம் சொல்வதும், "போலீஸ் கேட்டால் எதையும் சொல்லாதேடா" என்று ரோகித்திடம் ஹேமந்த் சொல்வதும், ஏற்கவே முடியவில்லை.

விசாரணை

விசாரணை

எப்படி பார்த்தாலும், தன்னை குற்றமற்றவன் என்பதையே திரும்ப திரும்ப ஹேமந்த் சொல்கிறார், அதற்கு இந்த நண்பர் ரோகித் உதவுகிறார் என்பது போலதான் இந்த ஆடியோ உள்ளது" என்கிறார். உண்மையிலேயே சித்ரா எப்படி தான் இறந்தார்? யார்தான் காரணம்? அன்னைக்கு ரூமில் என்னதான் நடந்தது? தினம் தினம் இப்படியெல்லாம் ஆதாரங்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கிளப்பி கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? விடையே கிடைக்கவில்லை!

English summary
Chitra case issue and Ex CBI Officer interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X