• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சித்ராவை படுக்கையில் தள்ளி.. அநியாயம் செய்தாரா ஹேமந்த்.. கசிந்த ஆடியோ.. கிளம்பும் சந்தேகங்கள்

|

சென்னை: சித்ரா மரண வழக்கு தொடர்பாக, ஹேமந்துடன் அவரது நண்பர் பேசியதாக கசிந்துள்ள ஆடியோ பெரும் திருப்பத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் மர்மங்களையும் சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகிறது.

  சித்ரா தலையில் காயம்... கஞ்சா அடித்து இருக்கலாம்.. அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ..!

  சித்ரா இறந்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு விடையும் கிடைக்கவில்லை.. அதேசமயம் வழக்கு விசாரணைகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வந்தாலும், தினம் தினம் சித்ராவின் மரணம் குறித்த தகவல்கள் ஏதாவது ஒன்று வெளியாகிய வண்ணம் உள்ளன.

  அந்த வகையில், நேற்றில் இருந்து, ஹேமந்த் நண்பர் ரோகித்துடன் பேசும் ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. காஞ்சிபுரத்தை சேர்ந்த சையத் ரோகித் என்பவர்தான் ஹேமந்த்துக்கு ஜாமீன் தரகூடாது என்று இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

   புதுப்பாக்கம்

  புதுப்பாக்கம்

  இந்த ரோகித் என்பவர் வண்டலூரை அடுத்த புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்.. ஹேமந்தின் 10 வருட நண்பராம்.. சமீபத்தில் தி.நகர் வீட்டில் ஹேமந்த் சித்ராவுடன் ரோகித்தும் அவரது மனைவியும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.. "ஹேமந்த்துக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கிறது, சித்ரா மேல் சந்தேகப்பட்டு, கண்டித்து, அவரை படுக்கையில் தள்ளி ரத்தம் வரும்வரை அடிப்பான், நான் சமாதானப்படுத்துவேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.. இந்த ஆடியோ சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

   ஆடியோ

  ஆடியோ

  அந்த ஆடியோ ஒரு முக்கிய ஆதாரம் தான் என்றாலும், அந்த ஆடியோ மேலும் சில சந்தேகங்களை பரவலாக கிளப்பி வருகிறது. "என்னை நம்பி சொல்லு, என்னதான் நடந்தது? இது வாட்ஸ்அப் கால் தான், ரெக்கார்ட் எதுவும் பண்ண முடியாது தானே?" என்று ரோகித் சொல்கிறார். வாட்ஸ்அப் காலில் ரெக்கார்ட் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு, இப்போது எப்படி பேசியது வெளியே லீக் ஆனது என்று சித்ராவின் ரசிகர்கள் முதல் கேள்வி எழுப்புகிறார்கள்.

   விசாரணை

  விசாரணை

  சித்ரா இறந்த உடனேயே போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் ஹேமந்த் சென்றுவிட்டார்.. அதன்பிறகு சில நாட்கள் கழித்துதான் அவர் கைதாகி ஜெயிலுக்கு போகிறார் என்றாலும், அதுவரை ஹேமந்த் போலீசாரின் கண்காணிப்பில்தான் இருந்திருக்க முடியும்.. குறிப்பாக, அவரால் யாரிடமும் அவ்வளவு ஈஸியாக போனில் பேசிவிட முடியாது.. அப்படியே பேசினாலும் அதை டிராப் செய்யக்கூடும்.. அந்த வகையில், சித்ரா மரணம் நடந்த அடுத்த சில நாட்களில் இவர்கள் போனில் பேசிக் கொண்டது எப்படி? என்று அடுத்த சந்தேகம் எழுந்துள்ளது.

   போட்டோ

  போட்டோ

  "சாகறதுக்கு முன்னாடி அவளுடைய தலையில் எங்கியோ காயம் இருந்ததாம்.. ஆனா அது அவளே இடிச்சிகிட்டது கிடையாதுன்னு சொல்றாங்க.. நீ ஏதாவது செய்தியான்னு கேட்டாங்க.. நான் அவளை சத்தியமா அன்னைக்கு தொடல, அந்த காயம் பத்தி தெரியாதுன்னு சொல்லிட்டேன்" என்று ஹேமந்த் சொல்கிறார். அதற்கு ரோகித், "அப்படின்னா அவள் எங்கே போய்ட்டு வந்திருப்பா நமக்கு தெரியாம.. ஆமாடா அவ தலை வீங்கியிருந்தது.. நான் ஒரு மணி நேரம் ஜூம் பண்ணி அந்த போட்டோவை பார்த்தேன்.. தலை வீங்கி இருந்தது" என்கிறார்.. சடலத்தை மீட்ட போலீஸ்காரங்களுக்கு தெரிந்தது, ரோகித்துக்கு போட்டோவில் தெரிந்தது, ஏன் கூடவே இருந்த ஹேமந்த்துக்கு மட்டும் சித்ரா தலை வீங்கியிருந்தது தெரியவில்லை? இதுவும் இன்னொரு சந்தேகத்தை கிளப்புகிறது.

  டார்ச்சர்

  டார்ச்சர்

  "அம்மா பண்ணின டார்ச்சர்தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு இப்போ வெளியே வந்துடுச்சு பார்த்தியா. அவங்க அம்மா நல்லா இருக்க மாட்டாள், இந்த காசை குடு, அந்த காசை குடுன்னு அவளை போட்டு செஞ்சிட்டா.. செம பிரஷர்.. ஒரு மாசம் திருவான்மியூர் வீட்டில் அவங்க அம்மா செஞ்சிட்டாங்க அவளை.. ஒரு மாசம் அவளை செஞ்சதை என் கண்ணால பார்த்தேன்.. "இதுல வேற என்னமோ இருக்குடா.. அவ கஞ்சா சாப்பிட்டு இருந்தான்னு சொல்றாங்க.." என்று ஹேமந்த் சொல்கிறார்.

  சந்தேகம்

  சந்தேகம்

  இந்த ஆடியோ உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.. இது செட்டப் என்கிறார்கள் பலர்.. சித்ராவின் அம்மாவை மட்டுமே குற்றவாளியாக்குவது போல இந்த பேச்சு அமைந்துள்ளது என்றும், சித்ராவிடம் கெட்ட பழக்கம் இருந்ததை நாசூக்காக ஆடியோவில் சொல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

  நண்பர்

  நண்பர்

  இவ்வளவு நாள் கழித்து இந்த ஆடியோவை ஏன் வெளியிட வேண்டும்? சித்ராவின் நண்பர்கள் எத்தனையோ பேர் அவரது நல்ல குணங்களை வெளியே சொல்லி, மரணத்துக்கு நீதி கேட்டு வரும் நிலையில், ஒரே வீட்டில் சில காலம் ஒன்றாக வாழ்ந்ததாக சொல்லும் இந்த ஹேமந்த்தின் நண்பர் ஏன் இதுவரை, மீடியாவில் தலை காட்டவில்லை? மூச்சுக்கு முன்னூறு தடவை சித்துவுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாதுன்னு சொல்லிட்டு, இப்படி ஒரு திட்டமிடப்பட்ட நாடகத்தை ஏன் நடத்துகிறார்கள் என்றும் சோஷியல் மீடியாவில் கேள்விகள் எழுந்து வருகின்றன.

  மரணம்

  மரணம்

  அதேசமயம், இந்த ஆடியோவை முற்றிலுமாக சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்துவிட முடியாது.. ஒருவேளை, இதில் உள்ள தகவல்கள், சித்ராவின் மரணத்துக்கு நீதி கிடைப்பதாகவும் இருக்கலாம்.. எனவே எப்படி பார்த்தாலும், நம் போலீசார்தான் சித்ராவின் மரணத்தில் என்ன நடந்தது என்பதை வெளியே கொண்டு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.. அதிகாரப்பூர்வமாக காவல்துறை தரப்பில் எதுவுமே வெளிவராத நிலையில், இதுபோன்று ஆயிரம் புரளிகள், வதந்திகள், தகவல்கள் இணையத்தில் சுற்றி கொண்டுதானிருக்கும்!

   
   
   
  English summary
  Chitra case issue and Hemanths friend audio conversation
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X