சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துடிதுடித்து இறந்த சித்ரா.. 2 மாசமாச்சு.. ஒன்னுமே புரியலை.. ஹேமந்த்துக்கும் ஜாமீன் கிடைச்சாச்சு!

சித்ராவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: என்ன சொல்வதென்று தெரியவில்லை.. என்ன நினைப்பதென்றும் தெரியவில்லை.. சித்ரா மரணத்தில், ஹேமந்த் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது..

Recommended Video

    சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கு…ஹேம்நாத்திற்கு‌ ஜாமீன் கிடைத்தது எப்படி?!

    இதுவரை எந்த நடிகையின் மரணமும் இப்படி ஒரு மர்மத்தை நீண்ட நாட்கள் வைத்திருக்கவில்லை.. சித்ரா இறந்து 2 மாசம் ஆகிவிட்டது.. ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கு குழப்பமாகவே இருந்து வருகிறது.

    தற்கொலை செய்ய தூண்டியதாக ஹேமந்த் கைதானார் என்றாலும், சித்ரா மரணத்துக்கு காரணம் தெரியாமல் ரசிகர்கள் கலக்கமாகவே இருந்தனர்.. சித்ராவை அடித்து கொன்றுவிட்டார்கள் என்று அவரது அம்மா அலறிய பேச்சு ஒரு பக்கம், சித்ராவின் மரணத்தில் வேறு யாரேனும் தொடர்பில் இருக்கலாம் என்று ஹேமந்தின் அப்பா பேசிய பேச்சையும் இங்கு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.

    வழக்கு

    வழக்கு

    அப்படியானால் சித்ரா எப்படிதான் இறந்தார்? தற்கொலை என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் உறுதியாக வந்தது.. அதாவது ஹேமந்த்துக்கு இந்த தற்கொலையில் சம்பந்தமில்லை, அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும் தெளிவானது.. அதேசமயம், அவர் சைக்கோவாக நடந்து கொண்டுள்ளார்.. சந்தேகப்பட்டுள்ளார்.. டார்ச்சர் தந்துள்ளார்.. மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.. என்பன போன்றவற்றுக்கு ஆதாரமும் சாட்சியும் இருந்தும் அவைகள் எந்த அளவுக்கு பரிசீலிக்கப்பட்டன என்றும் தெரியவில்லை.

     பரிசீலனை

    பரிசீலனை

    இதை ஹேமந்தின் நண்பன் ரோஹித்தே பல பேட்டிகளில் தெளிவுபடுத்தியிருந்தார்.. ஆனாலும் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? அவர் தந்த ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்டதா? ரோஹித்தை யாராவது விசாரித்தார்களா என்றும் தெரியவில்லை.. ஒருவேளை ரோகித்தை கூப்பிட்டு விசாரித்திருந்தால், இந்த வழக்கின் போக்கு வேறு திசையில் சென்றிருக்கலாம், அதன்மூலம் மேலும் சில உண்மைகள் தெரியவந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    ஆதாரம்

    ஆதாரம்

    இந்த 2 மாசமாகவே கோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது.. ஆனால், இதுவரை ஏன் வழக்கு தொடர்பான குற்ற பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்று தெரியவில்லை.. தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே ஹேமந்த் பெயர் அடிபட்டு வருகிறது.. மற்றபடி வேறு எந்த ஆதாரமும், தடயமும் கிடைக்கவில்லை போலும்.. அதற்குள் ஜாமீனும் தந்தாயிற்று. இனி நிரந்தரமாகவும் விடுவிக்கப்படலாம்.

     பாவம் சித்ரா..!

    பாவம் சித்ரா..!

    ஆனால், சித்ரா மரணத்துக்கு விடை என்ன? ஒரு பெண்ணை மன ரீதியாக அழுத்ததிற்கு உள்ளாக்கி தற்கொலை வரை கொண்டு சென்றால் அதற்கு என்ன தண்டனை? துடித்து துடித்து ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோயுள்ளதே, இதற்கு நீதி என்ன? தன்னையே முழுசாக நம்பி வந்த பெண்ணின் வர்ஜினிட்டியை சந்தேகப்பட்ட அந்த நடவடிக்கைக்கு என்ன தண்டனை? சித்ராவின் அம்மாவும், ஹேமந்தின் அப்பாவும் எழுப்பிய கேள்விகளுக்கு என்ன பதில்? பத்தோடு பதினொன்னாவே சித்ராவின் மரணமும் முற்றுப் பெற்றுவிடுமா? சித்ரா மீது உயிரையே வைத்துள்ள ரசிகர்களின் தவிப்புகளுக்கு எந்த பதிலும் கிடைக்காதா? அல்லது திடீர் திருப்பமாக ஏதாவது இந்த வழக்கில் மாற்றம் வந்துவிடுமா? தெரியவில்லை.. ஆனால், பாவம் சித்ரா..!

    English summary
    Chitra case issue and Hemnath got Bail from High court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X