சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் அந்த "அரசியல்வாதி" மகன்.. சித்ராவை சாய்த்த ஹேமந்த்.. அதிர்ச்சி தரும் புதுப்புது தகவல்கள்!

சித்ராவை பணத்துக்காகவே நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார் ஹேமந்த்

Google Oneindia Tamil News

சென்னை: சித்ரா மரணம் குறித்த தகவல்கள் புதுசு புதுசாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன.. ஹேமந்த் ஜெயிலில் இருந்தாலும், அவர் எப்படி சித்ராவை ஏமாற்றினார், எப்படி தற்கொலை வரை தூண்டினார் என்பது குறித்தும் விஷயங்கள் கசிந்து வருகின்றன.

ஒரு அரசியல் பிரமுகர் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்ததாக, அவர் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தெரியவந்தது.

கடைத்திறப்பு விழாக்களுக்கு அதிகம் செல்வதால், அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் சித்ராவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது.

டேட்டிங்

டேட்டிங்

அதேபோல, சித்ரா தற்கொலை வழக்கில் ஹேமந்த் தவிர மேலும் பலர் சிக்குவார்கள் என்று முன்பே போலீஸ் சொன்னது போல, அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களை வரிசையில் ஒரு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரும் அடிபட்டு வருகிறது. இவர் சித்ராவை டேட்டிங் அழைத்து சென்று, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

டிரைவர்

டிரைவர்

இந்நிலையில், ஹேமந்த் சித்ராவை எப்படி எல்லாம் ஏமாற்றி பணம் கறந்தார் என்பது குறித்தும் போலீஸ் தகவலில் தெரியவந்துள்ளது.. சித்ரா குடும்பத்தை தெரிந்த அளவுக்கு ஹேமந்த்தின் குடும்பம் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வரவில்லை.. ஆனால் சாதாரண குடும்பத்தில் இருந்துதான் ஹேமந்த் வந்துள்ளார்.. இவர் அப்பா ரவிச்சந்திரன் கார் டிரைவராக வாழ்க்கையை தொடங்கியவராம்.. பிறகுதான் சிங்கப்பூரில் வேலை கிடைத்ததும், அங்கு சென்று பாடுபட்டு உழைத்து குடும்பத்தை காப்பாற்றி உள்ளார்.

அடாவடி

அடாவடி

அப்பா வெளியூரில் வேலை பார்க்கும் சமயம், ஆடம்பர பிரியரான ஹேமந்த்தோ, டிப்டாப் டிரஸ் போட்டுக் கொண்டு, பெரிய வீட்டு பிள்ளை போலவே வலம் வந்துள்ளார்.. வீட்டில் அளவுக்கு அதிகமான செல்லம்.. எதையும் தட்டிக் கேட்கவோ, கண்டிக்கவோ இல்லாமல் தான்தோன்றித்தனமாகவே வளர்ந்திருக்கிறார்.. அம்மாவின் பேச்சும் அவரிடம் எடுபடவில்லை.. நாளடைவில் விஐபி மகன்கள், விவிஐபி அரசியல்வாதிகளின் மகன்கள் என சிலருடன் தொடர்பு வைத்து கொண்டு, பார்ட்டி, பப்பு என்று சுற்றி வந்தாராம்.

மோசடி

மோசடி


பிரபலங்களின் மகன்களுடன் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டு, பெரிய இடத்து பழக்கம் தனக்கு இருப்பதாக தனக்கு தெரிந்தவர்களிடம் காட்டிக் கொண்டு, அரசு வேலை, டாக்டர் சீட் வாங்கி தருகிறேன் என்று உதார் விட்டு, கோடிக்கணக்கில் மோசடி செய்ய ஆரம்பித்துள்ளார்.. பிறகு சீரியலில் வாய்ப்பு இழந்த நடிகைகளிடம், பெரிய சான்ஸ் வாங்கி தருவதாக சொல்லி அங்கேயும் வேலை காட்டி உள்ளார் ஹேமந்த்.

விஐபிக்கள்

விஐபிக்கள்

அப்படித்தான் அந்த வலையில் விழுந்துள்ளார் சித்ரா.. பெரிய கார், காஸ்ட்லி லைப், விஐபிகள் சகவாசம், அரசியல்வாதிகளின் மகன்களுடன் போட்டோ, என இதையெல்லாம் பார்த்து சித்ரா ஏமாந்தே விட்டார் போலும்.. அதிலும் ஒருசில விஐபிக்களின் மகன்களை அறிமுகம் செய்து வைக்கவும் ஹேமந்த் மீதான நம்பிக்கை மேலும் அதிகமாகி உள்ளது. தன்னை ஒரு தொழிலதிபர் என்றுதான் சித்ராவிடம் பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் ஹேமந்த்.

நெருக்கம்

நெருக்கம்

ஆனால், நாளடைவில் காசுக்கு வந்து ஹேமந்த் தன்னிடம் நின்றதும்தான் சித்ரா அதிர்ந்து போயுள்ளார்.. முக்கியமான அரசியல்வாதி ஒருவரின் மகன் தனக்கு நெருக்கம் என்று சொல்லி, மெடிக்கல் சீட்டுக்காக கோடி கணக்கில் ஏமாற்றி உள்ளார் ஹேமந்த்.. அதனால் பணத்தை இழந்தவர்கள் ஹேமந்த்தை நெருக்கவும், ஹேமந்த் சித்ராவிடம் பணத்தை கறக்க ஆரம்பித்துள்ளார்.. அப்படித்தான் ஹேமந்த் சாயம் வெளுக்க தொடங்கியது.

ஈர்ப்பு

ஈர்ப்பு

ஆனால், அந்த மகன் யார் என்று தெரியவில்லை.. அதேபோல, மேலும், ஹேந்த்தின் நண்பரான இன்னொரு அரசியல்வாதி மகனுக்கும் சித்ரா மீது ஈர்ப்பு இருந்ததாக சொல்கிறார்கள்.. அவர் யார் என்றும் தெரியவில்லை. நாளுக்கு நாள் ஹேமந்த் மீது புகார்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன.. ஒருவேளை இந்த புகார்கள் எல்லாம் உண்மையாக இருந்து, போலீஸ் தரப்பும் ஆரம்பத்திலேயே ஹேமந்த் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் சித்ரா உயிரிழக்காமல் தடுத்திருக்கலாம்.

 அரசியல்?

அரசியல்?

எனினும், இந்த மரணத்தில் இன்னும் மர்மங்களும் அரசியல் வாடையும் சேர்ந்து அடிப்பதால், ஹேம்நாத் கைது செய்யப்பட்டதுடன் இந்த விவகாரம் முடிவுக்கு வராது என்கிறார்கள்.. அதேபோல, பலபேரை காப்பாற்றுவதற்காக, ஹேம்நாத் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் எஎனறு ஹேமந்த்தின் அப்பா சொன்னதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

English summary
Chitra Husband Hemnaths Character, Police Report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X