சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இப்படித்தான் இறந்தார்".. பதற வைத்த சித்ராவின் மரணம்.. அதிர வைக்கும் நிபுணர் குழு அறிக்கை

சித்ரா தற்கொலை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எதற்காக சித்ரா தற்கொலை செய்தார்? என்ன காரணம்? யார் காரணம்? என்பது குறித்தெல்லாம் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது... இதையடுத்து சித்ரா மரண வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது!

Recommended Video

    சென்னை: நடிகை சித்ரா தூக்கிட்டுதான் தற்கொலை: உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்!

    சித்ரா இறந்து போய் இத்தனை நாட்கள் ஆகியும் இன்னமும் மர்மம் விலகவில்லை.. இதற்கு முன்புகூட எத்தனையோ நடிகைகள் தமிழகத்தில் தூக்கு போட்டு இறந்து போயிருக்கிறார்கள்.. ஆனால் அவைகளின் மர்மங்கள் முழுவதுமாக வெளியே தெரியாவிட்டாலும், ஓரளவு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஆனால் சித்ரா விஷயம் அப்படி இல்லை.. இந்த வழக்கில் இப்போது வரை அதாவது போஸ்ட் மார்ட்டம் முதல் ஆர்டிஓ விசாரணை வரை, அனைவரும் சொல்லும் ஒரே கருத்து சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் ஆனால், தற்கொலைக்கு இன்னொரு காரணமும் உள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இன்னொரு காரணம் என்ன? என்பதுதான் தெரியாமலேயே உள்ளது.

    மர்மம்

    மர்மம்

    மகள் மரணத்தில் ஹேமந்த் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் அம்மா புகார் சொல்கிறார்.. என் மகன் மட்டுமே காரணமில்லை, வேறு யாராவது இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று ஹேமந்த் அப்பா சொல்கிறார். இப்படி மாறி மாறி புகார் சொல்கிறார்களே தவிர, யார்தான் உண்மையான காரணம் என்பதில் இப்போது வரை விடை கிடைக்கவில்லை.

     சைக்கோ

    சைக்கோ

    இதற்கு நடுவில்தான், ஹேமந்த் நண்பர் ரோஹித், சில ஆதாரங்களை காட்டி வழக்கின் போக்கை சற்று சூடேற்றினார்.. "சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடித்ததாக சித்ரா சொன்னால், உடனே சைக்கோவாக மாறிவிடுவாராம் ஹேமந்த்.. சித்ராவை கடித்து, கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தி கொடுமைப்படுத்துவாராம்.. ஒரு டிவி காம்பியரை ஹேமந்த், ஏமாற்றியதுடன் கர்ப்பமாக்கி, அபார்ஷன் வரை போனதாகவும் ரோஹித் பகீரை கிளப்பிவிட்டு போனார்.

    வரதட்சணை

    வரதட்சணை

    இப்போதைக்கு ஹேமந்த் ஜெயிலில் உள்ளார்.. ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ விசாரணையும் நடந்து முடிந்தது.. அதில், சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை காரணம் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.. அப்போதுதான், சித்ரா தற்கொலைக்கு வேறொரு காரணம் இருக்கலாம் என்று தன் கருத்தையும் ஆர்டிஓ தரப்பு வெளிப்படுத்தி இருந்தது.

     ஹைகோர்ட்

    ஹைகோர்ட்

    இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் ஹேம்நாத் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளது... இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    உத்தரவு

    உத்தரவு

    மேலும் இந்த அறிக்கையும் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது... இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Chitra Suicide case Expert team report
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X