சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இது கொலைதான்.. தற்கொலையே கிடையாது.. அவன்தான் காரணம்".. சித்ராவின் அம்மா ஆவேசம்!

சித்ரா மரணம் கொலைதான் என்று அவரது அம்மா தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "நெருக்கமான சீனை பத்தியே பேசிட்டு இருந்தான்.. என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கல.. அவன்தான் கொன்னுட்டான்.. கழுத்துல காயம் இல்லையே, நாக்கு வெளியே வரலையே... என் பொண்ணு சாவுக்கு நியாயம் வேணும்" என்று தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் தாயார் கதறி அழுதுள்ளார்.

சித்ரா மரணம் தொடர்பாக, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.. சித்ராவின் தற்கொலைக்கு ஹேமந்த்தான் தூண்டினார் என்று, போலீசார் அவரை கைது செய்து புழலில் அடைத்துள்ளனர்.

இதற்கு காரணம், சித்ரா கடைசியாக ஹேமந்தின் அப்பாவிடம் போனில் அழுதபடியே பேசியதுதான் என்கிறது காவல்துறை தரப்பு.

வரதட்சணை கொடுமையா - சித்ரா கணவரிடம் ஆர்டிஓ விசாரணை - சக நடிகர்களையும் விசாரிக்க முடிவு வரதட்சணை கொடுமையா - சித்ரா கணவரிடம் ஆர்டிஓ விசாரணை - சக நடிகர்களையும் விசாரிக்க முடிவு

 பேட்டி

பேட்டி

ஆனால், சரியான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து என் மகன் ஹேமந்தை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் ஆபீசில் ஹேமந்த் அப்பா புகார் அளித்துள்ளார். இதனிடையே, சித்ராவின் பெற்றோர், ஒரு தனியார் சேனலுக்கு முதன்முறையாக பேட்டி அளித்துள்ளனர்.. அதில் பல விஷயங்களை வேதனையுடன் கண்ணீருடன் சொல்கிறார் சித்ராவின் அம்மா..

 அவன்தான்

அவன்தான்

அதன் சுருக்கம் இதுதான்: "அவன் பேசும்போதுதான் ஒவ்வொரு தப்பா தெரிஞ்சது.. கட்டப்பஞ்சாயத்து பண்ணுவேன், ஏசி தெரியும், டிசி தெரியும்னு சொல்லுவான்.. அப்போதான் எனக்கு சந்தேகம் வந்தது.. ஆனால் என் பொண்ணு தற்கொலை இல்லை.. கொலைதான்.. அவன் அடிச்சே கொன்னுட்டான்.. அவன்தான் செய்தான்னு உண்மையான்னு ஆயிடுச்சுன்னா சித்ரா ஃபேன்ஸ் யாருமே அவனை சும்மா விட மாட்டாங்க..

 சந்தேகம்

சந்தேகம்

அவங்களுக்குள்ளே முன்னாடி சின்ன சின்ன சண்டைகள் வந்துபோகும்.. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கு.. சீரியலில் நெருக்கமாக காட்சியில் நடிச்சதால, சித்ராவை அரிச்சிட்டே இருந்தார்.. அது ஆபாசமான சீன் இல்லை.. அது உலகத்துக்கே தெரியும்.. இன்னைக்கு இந்த சீன் வந்துடுச்சு.. நாளைக்கு எந்த சீன் வரும்?ன்னு அதை பத்தியே பேசிட்டு இருந்தார்.

நெருக்கம்

நெருக்கம்

உடனே நானும், சரிப்பா, உனக்கு என்ன பிரச்சனை, அப்படி நடிக்க கூடாது, யார்கிட்ட பேசணும்னு சொல்லுன்னு கேட்டேன்.. அதுக்கு, கதை எழுதறவங்க கிட்ட என்னை பேச சொன்னான்.. நானும் அவங்ககிட்ட "மேடம், என் பொண்ணுக்கு நிச்சயம் ஆயிடுச்ச. ரொமான்ஸ் சீன் எல்லாம் குறைச்சிக்கலாம்"னு சொன்னேன்.. அவங்களும், சரி அம்மா நான் பிறகு பேசுகிறேன் என்று போனை வெச்சிட்டாங்க.

 வாக்குவாதம்

வாக்குவாதம்

ஆனாலும் மறுபடியும் இந்த சீன் பத்தியே பேசிட்டு இருந்தார்.. இந்த அளவுக்கு நடந்திருக்கும்போது, சந்தேகம்தான் அவனுக்கு அதிகமாகி இருக்குன்னு நினைக்கிறேன்.. கடைசி நாளில்கூட இது பத்தி வாக்குவாதம் வந்திருக்கும்.. ஏடாகூடமாக ரெண்டு பேருக்கும் சண்டை வந்து இருக்கலாம்.. அடிச்சிருக்கலாம்.

 ஆடி கர்

ஆடி கர்

ஏன்னா தற்கொலைன்னா அது நல்லாவே பார்க்க தெரியும்.. கண் பிதுங்கி வரும், நாக்கு வெளியே வரும், குரல் வளை நசுங்கி இருக்கும்... கழுத்துல எந்த தடயமும் இல்லை.. அதே மாதிரி ஃபேனில் தொங்கினால், அந்த பேன் வளைஞ்சிருக்கும்.. உடைஞ்சிருக்கும்.. ஆடி காரை எந்த எம்எல்ஏ வாங்கி தந்தது? ஆயிரம் சொல்லுவாங்க.. அது யார் அந்த எம்எல்ஏ? வந்து அந்த கடனை அடைக்க சொல்லுங்க.

நியாயம்

நியாயம்

சித்ரா நல்லவன்னு மக்களுக்கு தெரியும்.. எங்களுக்கு என் மகள் சாவுல நியாயம் வேணும்.. இது கொலைதான்.. தற்கொலை கிடையாது.. கண்டிப்பா இதை சிபிஐ வரைக்கும்கூட எடுத்துட்டு போவோம்.. என் பொண்ணுக்கு நீதி வேணும்.. என் பொண்ணை மோசம் பண்ணிட்டாங்க.." என்று கண்ணீர் விட்டபடியே சொல்கிறார். அரும்பாடு பட்டு, ராப்பகலாக பாடுபட்டு உழைப்பால் மேலே வந்தவர் சித்ரா.. தன் பெற்றோரை கண்கலங்காமல் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்த சித்ராவை நினைத்து, பெற்றோர் கண்கலங்கி கொண்டு மட்டுமே இருக்கிறார்கள்!

English summary
Chitras Parests says about Hemanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X