சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் சோழர் கால கோவிலையே காணோம்.. அமைச்சர் சேகர்பாபுவுக்கு, பொன் மாணிக்கவேல் பரபர கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தில் சோழர்கால கோவில் மாயமாகி உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். இவர் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சிலைகளை மீட்டு கொண்டு வந்தார்.

அதன்பிறகு அவர் சிலை கடத்தல் புலானாய்வு பிரிவின் சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். இந்த வேளையிலும் தமிழக கோவில்களில் சிலை, கலை பொருட்கள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரித்தார்.

அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை

சேகர்பாபுவுக்கு கடிதம்

சேகர்பாபுவுக்கு கடிதம்

இந்நிலையில் தான் பொன் மாணிக்கவேல், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கர்நாடகத்தில் உள்ள பழமையாகன சோழர் கால கோவில் பற்றிய விபரங்கள் உள்ளன. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சோழர்கால கோவில், சிலைகள் மாயமாகி உள்ளதாக கடிதத்தில் கூறியுள்ளார்.

 சோழ மன்னர்கள்

சோழ மன்னர்கள்

முதலாம் ராஜராஜ சோழனின் பேரனும், முதலாம் ராஜேந்திர சோழனின் மகனுமானவர் தான் முதலாம் ஸ்ரீஉடையார் ராஜாதி ராஜ தேவர். இவர் தனது தந்தையான முதலாம் ராஜேந்திர சோழன் நினைவாக ராஜேந்திர சோழபுரம் என்ற நகரை தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே நிறுவினர். இந்த நகரம் குனிகலில் இருந்து 5 கிலோமீட்டர் தெலைவில் உள்ளது.

 தந்தை நினைவாக கோவில்

தந்தை நினைவாக கோவில்

மேலும் கோதேகிரி கிராமத்தில் தனது தந்தையின் நினைவாக 949 ஆண்டுகளுக்கு முன்பு 'ராஜேந்திர சோழீஸ்வரம்' என்ற பெயரில் கோயிலைக் கட்டினார். இங்கு வெண்கல சிலை மற்றும் கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள் இருந்தன. தற்போதைய தகவலின்படி இந்த கிராமத்தில் பழமையான கோவில் இல்லை. கோவில் கல்வெட்டு புறம்தள்ளப்பட்டுள்ளது.

Recommended Video

    Maharashtra மட்டும் இல்லை... BJP-ன் அரசியல் ஆட்டத்தில் வீழ்ந்த அரசுகள் *Political
    சிலைகள்

    சிலைகள்


    கோவிலில் இருந்த வெண்கல சிலை, கற்சிலைகள் திருடப்பட்டுள்ளது. தமிழக அதிகாரிகள் கல்வெட்டுகளை மீட்டு, காணாமல் போன கோவில் மற்றும் சிலைகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசில் புகார் அளிக்க வேண்டும். மேலும் கோவில் இருந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.

    English summary
    Former Idol wing IG Pon Manikavel has written to Hindu Charitable Affairs Minister Shekar babu that the Cholarkala temple in Tumkur district of Karnataka has disappeared.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X