சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும்... கிறிஸ்துமஸ் கோலாகலம்... தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு!

Google Oneindia Tamil News

சென்னை: இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டப்படுகிறது. தேவலாயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

வேளாங்கண்ணி, சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட தமிழத்தின் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது. அங்கு கொரோனா தடுப்பு முறைகள் பின்பற்றப்பட்டன.

Christmas celebrations in the world

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிது.

கொரோனா தொற்று காரணமாக சில நாடுகளில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் கலையிழந்தாலும், பெரும்பாலான நாடுகளில் வழக்கமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது.

மனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்... தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!மனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்... தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

கர்நாடகம், கேரளா, தலைநகர் டெல்லி மற்றும் மேற்கு வங்கம், கோவா மாநிலங்களில் தேவலாயங்களில் நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா திருத்தலத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. சென்னையில் சாந்தோம், பெசன்ட் நகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கொரோனா அச்சறுத்தல் காரணமாக தேவலாயங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள பின்பற்றப்பட்டன.

English summary
Christmas, the day Jesus Christ appeared, is celebrated all over the world today. Special services were held in the churches at 12 midnight
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X