சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் 122 டிகிரி பாரன்ஹீட் வெயில்..வரலாறு காணாத சாதனை.. தமிழகமும் ஒரு காலத்தில் வெளுத்திருக்கு

Google Oneindia Tamil News

சென்னை: ராஜஸ்தானில் 122 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியுள்ளது. தமிழகத்திலும் இதுபோல் ஒரு காலத்தில் திருத்தணியில் அதிகபட்சமான வெப்பம் கொளுத்தியுள்ளது.

Recommended Video

    17ம் நூற்றாண்டில் மதுரையை நாசம் செய்த வெட்டுக்கிளிகள்

    மே 25-ம் தேதி முதல் டெல்லி, ராஜஸ்தான்,பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெப்பநிலை பதிவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுத்தது.

    வடமாநிலங்களில் வெப்பம் கொளுத்துவதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியாலும் , அதீத வெப்பத்தாலும் இறக்கும் சோகம் நடைபெற்றுள்ளது.

    செல்ல மகள் வாங்கிய பட்டம்.. பூரித்து போன வருண் காந்தி.. வைரலான இந்திரா காந்தியின் கொள்ளு பேத்திசெல்ல மகள் வாங்கிய பட்டம்.. பூரித்து போன வருண் காந்தி.. வைரலான இந்திரா காந்தியின் கொள்ளு பேத்தி

    வெட்டுக்கிளிகள்

    வெட்டுக்கிளிகள்

    இந்த நிலையில் நேற்றைய தினம் ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதாவது 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையாகும். நாடு முழுவதும் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் பாடாய்படுத்தி வருகின்றன.

    வெதர்மேன்

    வெதர்மேன்

    தற்போது 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் அந்த மாநிலம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அது போல் இதுவரை 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சந்தித்த இந்திய மாநிலங்கள் குறித்த பட்டியலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் நேற்று 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது.

    அதிகபட்சம்

    அதிகபட்சம்

    இதுவரை இந்தியாவில் கடந்த காலங்களில் 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியிருந்ததை பார்ப்போம். கடந்த 2016-ஆம் ஆண்டு 19-ஆம் தேதி மே மாதம் ராஜஸ்தானில் ஃபலோடியில் 123.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. இந்தியாவில் இத்தனை ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச வெப்பநிலையாகும்.

    ஃபலோடி

    ஃபலோடி

    கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி சுருவில் 123.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருந்தது. ராஜஸ்தானில் ஆல்வாரில் கடந்த 1956 ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி 50.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி ஃபலோடி 50.5. டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான்

    கடந்த 2016 ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி சுருவில் 50.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது. 2003-ஆம் ஆண்டு 5 ஜூன் மாதம் ஒடிஸா மாநிலத்தில் டிட்லகாரில் 50.1 டிகிரி செல்சியஸ் இருந்தது. ராஜஸ்தானில் 1934-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கங்காநகரில் 50 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. 1995-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் தோல்பூரில் 50 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது.

    திருத்தணியில் அதிக வெயில்

    திருத்தணியில் அதிக வெயில்

    கடந்த 2016-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி ஃபலோடி 50 டிகிரி வெப்பநிலை இருந்தது. இந்தியாவில் இத்தனை அதிகமான வெப்பநிலையை பார்த்தோம். தமிழகத்திலும் இது போன்ற அதிக வெப்பநிலை ஒரு ஊரில் பதிவாகியிருந்தது. அது தெரியுமா, அது திருத்தணியில் கடந்த 2003-ஆம் ஆண்டு 29-ஆம் தேதி 48.6 டிகிரி செல்சியஸ் அதாவது 119.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman says that Churu in Rajasthan recorded 50 degree C yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X