சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அழைத்து கருத்துக்கேட்ட மத்திய அரசு.. நன்றி சொன்ன கமல்.. ஸ்டாலின் ஆட்சி.. கேள்விக்கு சொன்ன பதில்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் 3 மாத ஆட்சியை பார்த்து கொண்டு இருக்கிறோம்.. இன்னும் கருத்து சொல்லவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

டெல்லியில் சினிமா திருத்த சட்டம் குறித்து மத்திய அரசிடம் தனது கருத்தை தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். அவரை அழைத்து கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருந்தது.

இந்நிலையில் இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட் டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

அடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்அடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

 நன்றி

நன்றி

டெல்லியில் சினிமா திருத்த சட்டம் குறித்து தந்த மனு பற்றி வெளியே சொல்ல அனுமதி இல்லை. இருந்தாலும் என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்தும் அந்த கருத்தை சொல்லுவதற்காக அழைத்த மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விசாரித்தவர்கள் பேச்சு சுதந்திரத்தை போல் சிந்தனை சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதாக எனக்கு நம்பிக்கை அளிக்கிறது என்றார்.

மநீம தயராகி வருகிறது

மநீம தயராகி வருகிறது

திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துவது துவக்க காலம் முதல் செய்கின்ற வேலை என்று கூறிய கமல்ஹாசன், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டு இருக்கிறது. இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்றார்

பெருமையாக உள்ளது

பெருமையாக உள்ளது

சங்கரய்யாவிற்கு தந்த விருது எனக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். தமிழக மக்களுக்கும் தோழர்களுக்கும் கிடைத்த பெருமையாக க்ருதுகிறேன் என்று கமல்ஹாசன் நெகிழ்ச்ச தெரிவித்தார்.

எதுவும் சொல்லவில்லை

எதுவும் சொல்லவில்லை

3 மாத திமுக ஆட்சியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் கருத்து சொல்லவில்லை" கமல்ஹாசன் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதம் ஆகிறது, இதுவரை கமல்ஹாசன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal haasan thanked the Central Government for asking for his opinion about cinema act/ he also said that We are looking at the 3 month DMK rule. Not yet commented.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X