கண்ணதாசன்..அந்த ரூம் கதவை படக்குனு திறந்ததுமே..வெலவெலத்து போன விஸ்வநாதன்..நீதானா?இரு வரேன்..சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: "படைப்பதனால்தான் என் பேர் இறைவன்" என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் கண்ணதாசன்.. இதோ, அந்தவகையில், ஒருபாடல் எப்படி உருவாகி இருக்கிறது பாருங்கள்.. அந்த ருசிகர தகவலை படியுங்கள்.
காலங்களை கடந்த கீதங்களாக இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்பவர் கவியரசர் கண்ணதாசன்... இயல்பான, வாழ்வியல் செறிவுமிக்க வரிகளையே பாடல்களாக்கி அதன்மூலம், சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்கரித்தவர்..

காதலை மட்டும் அல்லாது, கற்க வேண்டிய நெறிகளையும், வாழ்வியல் அனுபவ கூறுகளையும், எளிய வார்த்தைகளால் இழைத்து தந்தவர்.

தனி ரகம்: மனிதனின் அன்றாட துயர், துயரங்களை, வடித்து வைத்த வரிகளில் அப்பட்டமாக காட்டியவர்.. அந்த வரிகளுக்கு, இன்னிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனின் வருடிக்கொடுக்கும் இசையே தனி ரகம். இவர்கள் இணைந்து உருவாக்கிய ஒவ்வொரு பாடலுக்கு பின்னணியிலும், ஒவ்வொரு சுவாரஸ்யங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இந்த பாடலும் அப்படித்தான் உருவாகி உள்ளதாக சொல்கிறார்கள்.

Do you know how did the song compose and legends kannadasan and ms viswanathan

எம்எஸ்வி புகழின் உச்சியில் இருந்த நேரம் அது.. ரொம்ப பிஸி... கைவசம் நிறைய படங்கள். ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் 2-நாள் பெங்களூரு சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி ரூம் கொடுக்கப்பட்டிருந்தது. பெங்களூர் வந்த முதல்நாள் முழுவதுமே கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்... கண்ணதாசன் தூங்கும்போது யாராவது எழுப்பினால் கோபம் வந்துவிடுமாம்...!

டென்ஷன்: இதனால் அன்றைய நாள் முழுதும் எந்த கம்போசிங்கும் நடக்கவில்லை.. ஆனால் மறுநாள் காலையிலும் கண்ணதாசன் எழவில்லை.. தூங்கிக் கொண்டேயிருந்திருக்கிறார். எனவே, எம்எஸ்வி டென்ஷன் ஆகிவிட்டார். கண்ணதாசனின் ரூம் கதவு முன்பு போய் நின்று கொண்டு, "யாராவது போய் கவிஞரை எழுப்பிவிட போறீங்களா? இல்லையா? இல்லேன்னா நான் கிளம்பி ஊருக்கு போயிடுவேன்" என்று அங்கிருந்து சத்தம் போட்டிருக்கிறார்.

டக்கென்று கண்ணதாசனின் ரூம் கதவு திறந்தது... எல்லோரும் பயந்தே போய்விட்டார்கள். எம்எஸ்வி பேசியது எப்படியோ கவிஞருக்கு கேட்டிருக்குமே என்று படபடப்பு எகிறி விட்டது.
கவிஞர் வெளியே வந்தார்.. எம்எஸ்வியிடம்... "சொன்னது நீதானா"... என்றார்.

எம்எஸ்வியோ ஒரு கணம் பதறிட்டார். "ஐயோ.. நான் இல்ல... அது வந்து.." என்று திணறினார்.

ஆனால் கவிஞரோ, எம்எஸ்வியையே உற்றுப்பார்த்துகொண்டு, "இல்லை... சொன்னது நீதானா? சொல்.. சொல்.. சொல்.. என் உயிரே" இந்த வரிகளை போய் கம்போஸ் செய், இதோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு போனாராம்..!

இப்படித்தான் அந்த பாடல் பிறந்திருக்கிறது.. பல பாடல்களும் இப்படியே தான் யதார்த்தமாய் பிரசவித்திருக்கின்றன..!

வார்த்தைகள்: மெட்டுக்குள் சிக்காத சில வார்த்தைகளை மாற்றுமாறு விஸ்வநாதன் சொல்லவும், அதை கண்ணதாசன் மாற்றவும், அதை உதவியாளர் திருத்தவும் எல்லாமே வெறும் 30 நிமிஷத்துல முடிந்துவிடுமாம்.. ஒருமுறை அதை சரிபார்த்துவிட்டு, "வரட்டுமா விசு" என்றபடியே கிளம்பி போய்விடுவாராம் கண்ணதாசன்..!

ஆர்மோனிய பெட்டி முன் உட்கார்ந்து இவர் ஸ்வரம் போட... எதிரே பேனா பிடித்து உட்கார்ந்து அலங்காரமற்ற வார்த்தைகளை கவிஞர் போட, அங்கு பிறந்த ஆயிரமாயிரம் பாடல்களுக்குதான் ஏது ஈடு? ஏது இணை?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+