சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா காண்பிக்கலாம்.. தமிழக அரசு அதிரடி அனுமதி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு- வீடியோ

    சென்னை: தமிழகத்தில், 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு 28ம் தேதி அரசாணை வெளியிட்டது. அது தற்போது அரசிதழிலும் இடம் பெற்றுள்ளது.

    Cinema Theatres can be open in 24 hours in Tamilnadu

    இந்த நிலையில் திரையரங்குகளை 24 மணி நேரம் திறந்து கொள்ளவும் அந்த உத்தரவில் அம்சம் இடம் பெற்றுள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் சுனில் பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    மல்டிபிளக்ஸ், மால் அல்லது சிறு திரையரங்குகள் என தனித்தனி பாகுபாடுகள் இதில், கிடையாது.. அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகளுக்கும் ஒரே சீராக இந்த உத்தரவு பொருந்தும்.

    சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் பகுதிகளில் திறந்து கடைகளை மூடுவதற்கான உத்தரவை காவல்துறை பிறப்பிக்க முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கூறுகையில், இது வரவேற்கத்தக்க ஒரு அறிவிப்பு. பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வசூல் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே திரையிடும், நேரத்தை அதிகரித்துள்ளதன் காரணமாக, டிக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவது, போன்றவையும் குறையும், தயாரிப்பாளர்களுக்கும் அதிக வசூல் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Cinema Theatres can be open in 24 hours in Tamilnadu, as state Government issues a fresh order on Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X