உஷார்! தியேட்டருக்கு அடிக்கடி செல்பவரா நீங்கள்? ‛இதை’ செய்தால் இனி கோடிக்கணக்கில் ஃபைன்! ஷாக் தகவல்
சென்னை: நீங்கள் அடிக்கடி தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவரா? அப்படியென்றால் வீடியோ, போட்டோ எடுக்காமல் இனி வரும் நாட்களில் மிகவும் உஷாராக இருங்கள். இல்லாவிட்டால் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2023 காரணமாக கோடிக்கணக்கில் ஃபைன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அதன் விபரம் வருமாறு:
இன்றைய கடினமான பணிச்சூழல்களுக்கு மத்தியில் நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் ரிலாக்ஸ் செய்யும் இடமாக தியேட்டர்கள் உள்ளன. மேலும் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் படங்கள் தியேட்டர்களில் வந்துவிட்டால் முதல் நாளிலேயே பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்.

இப்படி முதல் நாள் தங்களுக்கு பிடித்தவர்களின் படங்களை தியேட்டர்களில் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து கொள்கின்றனர். அதிகாலை காட்சிக்கு மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். என்னதான் ஓடிடி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் திரைப்படங்களை பார்த்தாலும் தியேட்டர்களில் திரைப்படம் பார்க்கும் சுகமே தனிதான். அதனால் தான் இன்று வரை தியேட்டர்களுக்கு என்று தனி மவுசு உள்ளது.
இப்படி ஆர்வமாக தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்கள் தாங்கள் எடுத்த முன்பதிவு டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவிடுவதையும், தியேட்டரில் திரைப்படம் பார்க்கும்போது ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சிகள், பஞ்ச் டயலாக்குகளை யாருக்கும் தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து ஸ்டேட்டஸ் போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி ஆர்வக்கோளாறாக இருக்கும் ரசிகர்களுக்கு தான் தற்போது மத்திய அரசு செக் வைத்துள்ளது. அதாவது தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 (Cinematography Amendment Bill 2023) நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாக்களில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி உள்ளது. இந்த மசோதா தான் தற்போது ரசிகர்களுக்கு பெரிய ஷாக்கை கொடுத்துள்ளன.
அதாவது இந்த மசோதாவின் நோக்கம் என்பது பைரஸியை (திருட்டு)தடுப்பது தான். அதாவது திரைப்படங்களில் இருந்து காட்சி, வசனங்களை தடுப்பது இந்த மசோதாவின் நோக்கமாக உள்ளது. அதன்படி பைரஸியில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது திரைப்பட தயாரிப்புக்கு ஆன செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. தியேட்டருக்கு செல்லும் நாம் உற்சாக மிகுதியில் குறிப்பிட்ட திரைப்படத்தின் காட்சிகளை செல்போனில் வீடியோவாக படம்பிடித்து வலைதளங்களில் ஸ்டேட்டஸ் அல்லது வாட்ஸ்அப்பில் பகிர்வது பைரஸியாக தான் கருதப்படும்.
இதனால் இனி நாம் தியேட்டருக்கு சென்றால் செல்போனில் போட்டோ, வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த புதிய மசோதாவின்படி பைரஸியில் ஈடுபடுவோருக்கு 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்கிறது. தற்போது வெளிவரும் பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் பல கோடிக்கு செலவில் எடுக்கப்பட்டு திரைக்கு வருகிறது. இந்த படங்களை நாம் வீடியோவாக எடுத்து பைரஸி குற்றம் செய்தால் நாம் பல கோடிகளை அபராதமாக செலுத்த நேரிடலாம். இதனால் நாம் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்.
தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 விரைவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட உள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்டவுடன் மேற்கூறிய நடவடிக்கைகள் அமலுக்கு வரும். இந்தியாவில் இந்த சட்டம் ஒன்றும் புதிது அல்ல.
ஏனென்றால் நம் நாட்டில் ஏற்கனவே பைரஸியை தடுக்க சட்டம் உள்ளது. முதல் முதலாக 1952ம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு கடந்த 1984ம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுதான் தற்போது நடைமுயைில் உள்ளது. அதன்படி பைரஸியில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 3 மாத சிறைத்தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் தொடர்ந்து பைரஸி புகார்கள் எழுந்து திரைத்துறைக்கு ஏராளமாக நஷ்டம் ஏற்பட்டு வந்தன.
இதனால் தான் திரைப்பட திருட்டை தடுக்கும் நோக்கத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்கனவே இருந்த ஒளிப்பதிவு திருத்த சட்டம் 1984ல் திருத்தங்கள் கொண்டு வந்து ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மசோதாவால் திரைப்பட சான்று விஷயங்களிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications