சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி திணிப்பு தொடர்பாக நேற்று திமுக எம்பி கனிமொழி டிவிட் செய்திருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளை மாற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது என்கிறார்கள்.

திமுக எம்பி கனிமொழியை பார்த்து சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் ஒருவர் நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கனிமொழி இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், சிஐஎஸ்எஃப் வீரர், அவரை இந்தியரா என்று கேட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கனிமொழி செய்து இருந்த டிவிட்டில், விமான நிலைய காவலரிடம் இந்தி தெரியாது என்று கூறியதற்கு நீங்கள் இந்தியரா என்று கேட்டனர். இந்தி தெரிந்தால் மட்டும்தான் இந்தியரா? இந்தி பேசுபவர்தான் இந்தியர் என்ற நிலை எப்போதில் இருந்து உள்ளது, என்று கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.

டாப் கியர் போட்டு.. வேற லெவலில் மேலே போகும் உதயநிதி.. அசுர வளர்ச்சி.. அப்செட்டில் சீனியர்கள்!டாப் கியர் போட்டு.. வேற லெவலில் மேலே போகும் உதயநிதி.. அசுர வளர்ச்சி.. அப்செட்டில் சீனியர்கள்!

வைரல் ஆனது

வைரல் ஆனது

இந்த நிலையில் கனிமொழிக்கு ஆதரவாக தேசிய அளவில் விவாதங்கள் எழுந்தது. தமிழக அரசியலில் மீண்டும் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரம் எடுக்க தொடங்கியது. திமுகவினர் மட்டுமின்றி திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளும் கூட கனிமொழிக்கு ஆதரவாக பேச தொடங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலர் தங்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நேர்ந்த அனுபவத்தை கூறினார்கள்.

தேசிய அளவில் விவாதம்

தேசிய அளவில் விவாதம்

இது உடனே தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. தமிழர்களை போலவே கர்நாடக மக்களும் தங்கள் மொழி குறித்து பேசினார்கள் . வங்காளிகள் தங்கள் மொழியின் முக்கியத்துவம் குறித்தும் தங்கள் மாநிலத்தில் இந்தி திணிப்பு குறித்தும் பேசினார்கள். ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் பீகாரிகள், மராத்தியர்கள் என்று பலரும் கனிமொழியின் பிரச்சாரத்தை தேசிய அளவில் கொண்டு சென்றனர்.

என்ன முடிவு

என்ன முடிவு

இந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் இருக்கும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளை மாற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இந்தி மட்டுமே தெரிந்த ஊழியர்களை மாற்ற முடிவு செய்துள்ளனர். தென்னிந்திய மொழிகள் தெரிந்தவர்களை சென்னையில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க சிஐஎஸ்எஃப் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியது

ஏற்கனவே கூறியது

ஏற்கனவே சிஐஎஸ்எஃப் இது தொடர்பாக விசாரணை நடத்தும் என்று தெரிவித்து இருந்தது . மொழி ரீதியாக யாருக்கும் எதிராக எங்கள் அதிகாரிகள் செயல்பட்டது கிடையாது . விரைவில் இதில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று சிஐஎஸ்எஃப் கூறியது. தற்போது அதேபோல் சிஐஎஸ்எஃப் சார்பாக அதிகாரிகள் மாற்றப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

English summary
CISF to put people with local language on airports after Kanimozhi tweet on Hindi goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X