சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் பலியாக காரணமாக இருந்தது திமுக.. முதல்வர் பழனிசாமி திடுக் குற்றச்சாட்டு!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்தனர் என்று முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்தனர் என்று முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கடுமையாக போராட்டங்கள் நடந்து வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இரண்டு அவைகளிலும் அதிமுக ஆதரவாக வாக்களித்தது. லோக்சபாவில் ஒரு அதிமுக எம்பியும், ராஜ்ய சபாவில் 11 அதிமுக எம்பிக்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த சட்டம் காரணமாக தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் குடியுரிமை பெறமுடியாமல், மீண்டும் இலங்கைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு இதனால் தள்ளப்படுவார்கள்.

குடியுரிமை சட்டம்.. மோடி, அமித் ஷா விளக்கிவிட்டனர்.. கவலை வேண்டாம்.. முதல்வர் பழனிசாமி பேட்டி! குடியுரிமை சட்டம்.. மோடி, அமித் ஷா விளக்கிவிட்டனர்.. கவலை வேண்டாம்.. முதல்வர் பழனிசாமி பேட்டி!

என்ன பேட்டி

என்ன பேட்டி

இலங்கை தமிழர்களுக்கு திமுகதான் துரோகம் செய்தது. இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் செய்வது போல முன்னாள் முதல்வர் கருணாநிதி நாடகம் ஆடினார். வெறும் 1 மணி நேரம் போராட்டம் இருந்துவிட்டு கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இலங்கை போர் நின்றுவிட்டதாக மக்கள் இடையே மோசமாக பொய் பேசினார்.

இலங்கை தமிழர்கள்

இலங்கை தமிழர்கள்

அவரை நம்பி வெளியே வந்த இலங்கை தமிழர்கள் பலர், இலங்கை ராணுவத்தால் அப்போது கொல்லப்பட்டனர். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக கருணாநிதி அறிவித்த‌தை நம்பி ஈழத்தமிழர்கள் உயிர்நீத்தனர்.1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட கருணாநிதி காரணமாக இருந்தார். கருணாநிதி வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்தனர்

திமுக எப்படி

திமுக எப்படி

இலங்கை தமிழர்கள் குறித்துபேச திமுகவுக்கு தகுதி கிடையாது.மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை.இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ததுபோல நாடகமாடும் கட்சி திமுக.இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக முயன்று வந்தார்.

அதிமுக நிலைப்பாடு

அதிமுக நிலைப்பாடு

அதேபோல் நானும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டுமென பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன்.இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியிடம் நான் பேசுவேன். தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சார்பில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகள் இலங்கை அகதிகளுக்கும் செய்துத் தரப்படுகிறது.

English summary
Citizenship Amendment: DMK is the reason for the death of 1.5 lakhs Tamils says Tamilnadu CM Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X