சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து டிவிட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பாஜக பதில் சொல்லியாக வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | Jamia Millia Islamia University protest | BJP Tweet

    சென்னை: டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து டிவிட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பாஜக பதில் சொல்லியாக வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்னொரு பக்கம் ஐஐடி மாணவர்கள், அலிகார் முஸ்லீம் பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

     கண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ! கண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ!

    திமுக எப்படி

    திமுக எப்படி

    இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். 2000 திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் அதிர்ச்சி

    மாணவர்கள் அதிர்ச்சி

    இந்த நிலையில் டெல்லியில் நடந்த போராட்டம் தொடர்பாக ஸ்டாலின் செய்துள்ள டிவிட்டில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    பாஜக ரத்தம்

    இங்கு மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் வரும் காலங்களில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். குடியுரிமை சட்ட திருத்தத்தை பாஜக மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு நிறைய எதிர்ப்பு நிலவி வருகிறது, இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    குடியுரிமை சட்டம்

    குடியுரிமை சட்டம்

    முன்னதாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். குடியுரிமைச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்ற தலைப்பில் இந்த வீடியோ யூ டியூபில் வெளியாகி உள்ளது. இந்த சட்டம் எவ்வளவு கொடுமையானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Citizenship Amendment: Every drop of blood spilled will need to be answered says DMK Chief M K Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X