அதிர்ந்த சென்னை.. விசிக - புரட்சி பாரதம் நிர்வாகிகள் பயங்கர மோதல்.. பேனரில் மோதிய பைக்கால் களேபரம்
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட 7 பேர் காயமடைந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.
தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நடத்தி வருகிறார். இவர் திமுக கூட்டணியில் உள்ளார். அதேபோல் பூவை ஜெகன்மூர்த்தி புரட்சி பாரதம் கட்சியை நடத்தி வருகிறார்.

இந்த 2 கட்சிகளும் எதிரெதிர் அணியில் உள்ளன. அதாவது திமுக கூட்டணியில் விசிக உள்ளது. அதேபோல் அதிமு கூட்டணியில் புரட்சி பாரதம் உள்ளது.
இந்நிலையில் தான் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அதாவது விருகம்பாக்கத்தில், விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் சென்றார். அப்போது அவரது பைக் புரட்சி பாரதம் கட்சி பேனர் மீது மோதியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த புரட்சி பாரதம் கட்சியினர், ஆதவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றியது. இதனால் அங்கு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைக்கலப்பாக மோதியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில் விசிகவின் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் என மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி இருதரப்பிலும் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த மோதல் விருகம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications