சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றிவேல் வேட்புமனுவை எப்படி ஏற்கலாம்.. கொந்தளித்த சுயேச்சைகள்.. பெரம்பூர் ஆபீசில் தள்ளுமுள்ளு

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் அதிகாரியுடன் சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குவாதமிட்டு சண்டை -வீடியோ

    சென்னை: பெரம்பூர் தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியுடன் சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குவாதமிட்டு சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகம், புதுவையில், 40 லோக்சபா தொகுதிகளிலும் , 18 சட்டசபை இடைத் தேர்தல்களும் ஒரே நேரத்தில், ஏப்ரல் 18ல் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் , சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    Clash in election office at Perambur against AMMK Vetrivel

    வேட்பு மனு தாக்கலின் கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்த நிலையில் , இன்று அந்த மனுக்கள் மீதான பரிசீலினை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன், பொது பார்வையாளர் ரஜித் துன்காணியா மேற்பார்வையில் , மனுக்கள் பரிசீலினை நடைபெற்றது.

    தமிழிசையின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்பு... ஆனா.. அமமுக வேட்பாளர்கள்தமிழிசையின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்பு... ஆனா.. அமமுக வேட்பாளர்கள்

    கூட்டத்தில், சுயேச்சை வேட்பாளர்கள் , கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அப்போது அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் மனுவை பரிசீலினை செய்யும் போது , வெற்றிவேல் தாக்கல் செய்த வேட்பு மனு சரியாக பூர்த்தி செய்யவில்லை, ஆகவே வெற்றிவேலின் விண்ணப்பத்தை நிராகரிக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் இருந்த சுயேச்சை வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

    இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன் மறுப்பு தெரிவித்ததால் , அங்கு கூடியிருந்த சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வேட்பாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் போலீசாருக்கும் வேட்பாளர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு 20 நிமிடம் அந்த இடம் போர்க்களம் போல போல காணப்பட்டது.

    பின்பு உயர் அதிகாரிகள், வேட்பாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    English summary
    Independent candidates shouting against the election officer at Perambur election office against AMMK candidate Vetrivel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X