புரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி
காஞ்சிபுரத்தில் திடீரென கொட்டிய ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
Recommended Video
சென்னை: 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றினால், எப்படி மழை பிச்சிக்கிட்டு ஊத்துமோ.. எப்படி சூறைக்காற்று சுழட்டி சுழட்டி அடிக்குமோ அப்படி காத்தும் மழையுமாக இப்போது குளுகுளுன்னு இருக்கிறது காஞ்சிபுரம்!
தமிழ்நாட்டில் வரப்போகிற 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை வரப் போகிறதென்றும், அதிலும் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் சொன்னது.
அதாவது குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறதாம், மேலும் வெப்பச்சலனம் அதிகமாக இருப்பதாலும் இப்படி இடியுடன் மழை பெய்யும் என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்சாகம்
அதன்படி, இன்னைக்கே பல இடங்களில் மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. அதிலும் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மழையை பார்த்ததும் உற்சாகமாகி விட்டனர்.

பேய் மழை
மதியமே காஞ்சிபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் ஆரம்பமானது. கொஞ்ச நாளாக வெயில் வறுத்தெடுத்த நிலையில், திடீரென மாறிய காலநிலையால் மக்கள் மகிழ தொடங்கினர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் மழை கொட்ட ஆரம்பித்ததும் மக்கள் திக்குமுக்காடி போய்விட்டனர். சாதாரண மழை இல்லை, பேய் மழை கொட்டித் தீர்த்து விட்டது.
|
ஆலங்கட்டி மழை
அதிலும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததும் இன்ப அதிர்ச்சி கூடியது. நகரமே வெள்ளக்காடாகிப் போனது. பல இடங்களில் மரங்களும் விழுந்தன. இதுதொடர்பான வீடியோவை ஒருவர் போட அதை தமிழ்நாடு வெதர்மேன் ரீடிவீட் செய்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்தால் ஆடிப் போகிறது. அப்படி பேயாட்டம் போட்டுள்ளது மழை. மரங்கள் வேரோடு சாயும் அளவுக்கு ஆடி ஆடி அசைகிறது.. மழை "சோ"வென ஊற்றுகிறது.
|
குதூகலம்
இந்த காற்று, மழைக்கு நடுவில் கரண்ட் ஒயர்கள் தாறுமாறாக அசைந்து, எப்போ அறுந்து விழுந்து விடுமோ என்ற பயம் கிளம்புகிறது. ஆனால் வெயிலில் காய்ந்து கிடந்த காஞ்சிபுர மக்கள் ஆலங்கட்டி மழையால் குதூகலமாக உள்ளனர்!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications