சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்பு, அமைதி, மனிதநேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும் - முதல்வர் பக்ரீத் வாழ்த்து

இந்த இனிய நாளில், திருக்குரான் போதிக்கும் நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும். அன்பு, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது

Google Oneindia Tamil News

சென்னை: இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்து அறிக்கையில் கூறியுள்ளார். அன்பு, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றும் அவர் தனது வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார்.

தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நன்நாளில் தமிழக இறைப் பணிக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த இறைத்தூதர் இப்ராஹிம், இறைவனின் விருப்பத்திற்கேற்ப தன்னுடைய ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்தார். இறைவனுக்காக தன்னுடைய மகனையே இழக்க முன் வந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தன்னலமற்ற தியாகத்தையும் இறை பக்தியையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள்

CM Edapadi Palanisamy and other leaders extend Bakrid greetings

உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், திருக்குரான் போதிக்கும் நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும். அன்பு, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று தெரிவித்து, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

சகோதரத்துவம், சமாதானம், பேணுவோம்... இஸ்லாமியர்களுக்கு கே.எஸ்.அழகிரி பக்ரீத் வாழ்த்துசகோதரத்துவம், சமாதானம், பேணுவோம்... இஸ்லாமியர்களுக்கு கே.எஸ்.அழகிரி பக்ரீத் வாழ்த்து

English summary
Tamilnadu Chief Minister Edappadi K Palaniswami has conveyed Bakrid greetings to Muslims in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X