சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர் திருவாரூரில்.. இவர் சேலத்தில்.. வீதி வீதியாக ஓட்டு வேட்டை.. கவுரவம் மிக முக்கியமாச்சே மக்களே

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியும், திருவாரூரில் ஸ்டாலினும் வீதி வீதியாக ஓட்டு கேட்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: அவங்கவங்க தொகுதியில் மட்டும்தான் இவர்கள் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பார்களா? என்று தொண்டர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

சுட்டெரிக்கும் வெயிலில் மண்டை காய்ந்து தமிழகம் முழுவதும் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து விட்டார்கள். பிரச்சாரத்துக்கு கடைசி நாள் என்பதால் ஒரு சில தலைவர்கள் மிக முக்கிய தொகுதிக்குள் செல்கிறார்கள்.

தன் மகன் போட்டியிடுகிறார் என்பதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு வீடு, சந்துபொந்து பாக்கி விடாமல் வாக்கு சேகரித்தார். இவர் மட்டுமில்லை.. வாரிசுகளை களமிறக்கிய எல்லாருமே வீதிகளில் இறங்கி வாக்கு கேட்டனர்.

என்னாது.. மோடி வென்றால் ரவீந்திரநாத் அமைச்சர் ஆவாரா.. இதுதான் ஓபிஎஸ் விளக்கம்! என்னாது.. மோடி வென்றால் ரவீந்திரநாத் அமைச்சர் ஆவாரா.. இதுதான் ஓபிஎஸ் விளக்கம்!

திருவாரூர்

திருவாரூர்

மேலும் இன்று கடைசி நாள் என்பதால், முக்கிய தொகுதிகளில் சென்ட்டிமென்ட்டாக பிரச்சாரத்தை முடிக்கிறார்கள் தலைவர்கள். குறிப்பாக, திருவாரூரில் முக ஸ்டாலினும், சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்!

சரவணன்

சரவணன்

இந்த 25 நாட்களாக வேனில் நின்று கொண்டுதான் முதல்வர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் இன்று, அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார் முதல்வர். அதிமுக வேட்பாளராக கே.ஆர்.எஸ்.சரவணன் களமிறக்கப்பட்டுள்ளார்.

கடை வீதிகள்

கடை வீதிகள்

இருந்தாலும் இவர் வெற்றி தோல்வி என்பது எடப்பாடியைதான் போய் சேரும் என்பதால்தான் முதல்வர் ஒரு கடை வீதியை விடவில்லை. எப்படியோ இன்னைக்கு சாயங்காலம் 6 மணி வரைக்கும்தான் பிரச்சார டைம். அதுவரை நடந்தே சென்று ஓட்டு கேட்பார் என தெரிகிறது.

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

ஆனால் ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தது மட்டுமில்லாமல் வாக்கிங் - டாக்கிங் - வோட்டிங் என்பதில் ஃபேமஸ் ஆனார். இருந்தாலும் திருவாரூர் தொகுதி ரொம்ப முக்கியமாச்சே.. அதனால் வேட்பாளர் பூண்டி கலைவாணனுடன் வீதி வீதியாக ஆதரவு திரட்டி அங்கு சாயங்காலம் 6 மணிக்கு பிரச்சாரத்தை முடிக்கிறாராம் ஸ்டாலின். ஆக மொத்தம்.. தங்கள் தொகுதி என்றாலே இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் ஸ்பெஷல்தான் போல!

English summary
MK Stalin and Edapadi Palanisamy are going to finish campaign in their own constitutions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X