சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆ.. அய்யா நீங்களா.. உள்ளே வாங்க..பரவாயில்லைப்பா.. பாய்லர் பக்கத்திலேயே நின்று டீ சாப்பிட்ட முதல்வர்

சேலம் சாலையோர டீ கடையில் முதல்வர் பழனிசாமி டீ குடித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: சொந்த ஊர் என்றாலே எல்லாருக்கும் ஒரே குஷிதான்! சேலத்தில் முதல்வர் கால் வைத்ததுமே ஏகப்பட்ட சந்தோஷம் முகத்தில்!

அதிமுக வேட்பாளராக கே.ஆர்.எஸ்.சரவணனை நிறுத்தினாலும், அந்த வெற்றியும் தோல்வியும் தன்னைதான் சேரும் என்பதில் ரொம்பவே கவனமாக உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் சென்ட்டிமென்ட்டாக இன்று கடைசி நாளில் சேலத்தில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

CM Edapadi Palanisamy drank tea in a roadside shop

சொந்த தொகுதியாச்சே.. வேனில் போய் பிரச்சாரமோ, ஒரு பொதுக்கூட்டம் நடத்தியோ வாக்கு சேகரிக்க முடியாது. அதனால் வீதியில் இறங்கி விட்டார். சாலை சாலையாக, வீதி வீதியாக ஓட்டு கேட்டு வருகிறார்.

இப்படித்தான் வாக்கு சேகரித்து வந்து கொண்டிருந்த முதல்வரின் கண்ணில் ஒரு டீக்கடை பட்டு விட்டது. தாமதிக்காமல் உள்ளே நுழைந்துவிட்டார் முதல்வர்! அந்த டீக்கடையில் ஏற்கனவே நிறைய பேர் டீ குடித்து கொண்டிருந்தனர்.

ட்ரியோ.. ட்ரியோ.. ட்ரியோ.. டுய்ய்ய்ய்.. ஜட்கா ஓட்டி திண்டுக்கல்லை மிரள வைத்த மன்சூர் அலிகான்! ட்ரியோ.. ட்ரியோ.. ட்ரியோ.. டுய்ய்ய்ய்.. ஜட்கா ஓட்டி திண்டுக்கல்லை மிரள வைத்த மன்சூர் அலிகான்!

கடைக்காரர் உட்கார சொல்லியும் முதல்வர் உள்ளே போய் உட்காரவில்லை. டீக்கடை பாய்லர் பக்கத்திலேயே நின்று கொண்டார் முதல்வர். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஸ்பெஷல் டீ ஒன்று முதல்வருக்கு வந்தது. பிளாஸ்டிக் இல்லை.. சில்வர் டம்ளரில்தான் டீ தந்தார்கள். முதல்வர் அதை வாங்கி குடிக்க... அவருடன் இருந்த வேட்பாளர் சரவணன் கை கூப்பி வணங்கியபடியே நின்றிருந்தார்.

அதற்குள் முதல்வர் டீ குடிப்பதை பார்க்க ஒரு கூட்டமே கூடிவிட்டது. பக்கத்து கடைக்காரர்கள் எல்லாம் முதல்வர் டீ குடிப்பதை எட்டி பார்த்து கொண்டே இருந்தனர். பிறகு அந்த கடையிலிருந்து நகர்ந்து சென்றார் எடப்பாடியார்!

English summary
CM Edapadi Palanisamy drank tea in a roadship shop in his Salem Election Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X