சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றி பெற எத்தனையோ வழிகள் இருக்கிறது... விபரீத முடிவு எடுக்க வேண்டாம் - முதல்வர் பழனிச்சாமி

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று ஜோதி ஸ்ரீதுர்காவின் தற்கொலை சம்பவம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் பதிவிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

CM Edapadi Palanisamy express condolence for Madurai Student Suicide

முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

CM Edapadi Palanisamy express condolence for Madurai Student Suicide

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா உடல் தகனம் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா உடல் தகனம்

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

English summary
Chief Minister Edappadi Palanichamy has taken to Twitter to comment on the suicide of Jyoti Sridurga, saying that it is very sad that student wealth is making such bizarre decisions. While there are innumerable ways to succeed in life, Chief Minister Palaniachai has recorded that success is guaranteed if the student wealth develops determination and continues effort.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X