சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதிக் பாட்சாவை நடுரோட்டில் பார்த்த எடப்பாடியார்.. ரெண்டே நாள்தான்.. கோவையையே அசர வைத்த முதல்வர்!

மாற்று திறனாளி இளைஞருக்கு முதல்வர் பணி நியமன ஆணை வழங்கி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சாதிக் பாஷாவின் வாழ்க்கை ரெண்டே நாளில் அடியோடு உயர மாறிவிட்டது.. இதற்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.

நம் முதல்வரை பொறுத்தவரை ரொம்பவும் எளிமையானவர்.. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று எளிதாக அணுகக்கூடியவர்.

அதேபோல முதல்வருக்கு எந்த பந்தாவும் காட்ட தெரியாது... சாலையில் எங்காவது வெளியூருக்கு சென்று கொண்டிருந்தால்கூட, காரை நிறுத்திவிட்டு, பொதுமக்களை சந்தித்து பேசுவார்.. அக்கறையாக நலன் விசாரிப்பார்.. எல்லாரையும் மாஸ்க் போடுங்க என்று அட்வைஸ் செய்துவிட்டு கிளம்பி செல்வார்.

முதல்வர்

முதல்வர்

அதுமட்டுமல்ல, இப்படி வெளியூருக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும், முதல்வரின் பயணம் ஒவ்வொரு முறையும் பேசப்பட்டுவிடும்.. அதற்கு காரணம், சாலையோரம் தன்னை சந்திக்க கையில் மனுவுடன் காத்திருக்கும் எத்தனையோ பேருக்கு ஆன் தி ஸ்பாட் உதவி உள்ளார்.. அது மாதிரியே இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இளைஞர்

இளைஞர்

கடந்த 18ஆம் தேதி கோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் குமாரபாளையத்தில் ஒரு இளைஞர் கையில் மனுவுடன் நின்று கொண்டிருந்தார்.. அவர் ஒரு மாற்றுத்திறனாளி.. பெயர் சாதிக் பாஷா.. அவரை பார்த்ததுமே முதல்வர் தன்னுடைய காரை நிறுத்தவும், சாதிக் பாட்சா அவர்களின் அருகில் சென்றார்.. அவர் கையில் இருந்த கோரிக்கை மனுவையும் முதல்வர் பெற்று கொண்டு கிளம்பி விட்டார்.

 கோரிக்கை மனு

கோரிக்கை மனு

சாதிக் பாட்சா, 12-ம் வகுப்பு வரை படித்தவர்.. தமிழ், ஆங்கிலத்தில், டைப்ரைட்டிங், எம்எஸ்... ஆபீஸ் டேலி இதெல்லாம் படித்துள்ளாராம்.. தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அரசு வேலை வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்... இந்த மனு வாங்கிய ரெண்டே நாளில் சாதிக் பாட்சாவுக்கு வேலை கிடைத்துவிட்டது. குமாரபாளையம் நகராட்சி பொது சுகாதார பிரிவில் கணினி பணியாளர் வேலை அவருக்கு கிடைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பூரிப்பு

பூரிப்பு

அந்த அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை அமைச்சர் தங்கமணி சாதிக் பாட்சாவிடம் வழங்கினார்.. மனுவை வாங்கி கொண்டு போய், ரெண்டே நாளில் முதல்வர் அரசு வேலையை அளித்ததை நினைத்து சாதிக் பாட்சா ஆனந்த கண்ணீர் வடித்தார்.. உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தன் சார்பிலும், மாற்றுத்திறனாளிகள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பூரித்து போய் சொல்கிறார்!

English summary
CM Edapadi Palanisamy helps Coimbatore disabled youth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X