சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனி தனி சீட்.. கண்டக்டருக்கு ஃபேன்.. ஆஹா.. தனியார் பஸ் முதலாளிகள் நிலைமை இனி பரிதாபம்தான் போலயே!

275 புதிய பேருந்துகளை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆம்னி பஸ்களையே தூக்கி விட்ட நம்ம அரசு பேருந்துகள்-வீடியோ

    சென்னை: கலர் கலர் பஸ்கள்... தனித்தனி சீட்டுகள்.. கண்டக்டருக்கு ஃபேன், என ஸ்பீக்கர்களுடன் களை கட்டுகிறது அரசு பஸ்கள். ஆம்னி பஸ்களையே தூக்கி விட்டது நம்ம அரசு பேருந்துகள்.

    தலைமை செயலகத்தில் 275 புதிய பஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து இன்று தொடங்கி வைத்திருக்கிறார். ரூ.69 கோடி மதிப்பில், 275 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 17 பஸ்கள், விழுப்புரத்திற்கு 72, சேலத்திற்கு 43, கோவைக்கு 75, கும்பகோணத்திற்கு 68 என மொத்தம் 250 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    எமர்ஜென்சி வழி

    எமர்ஜென்சி வழி

    இந்த பஸ்கள் அனைத்துமே பார்ப்பவர்களை சுண்டி இழுக்கிறது. ஏசி பஸ்சில் இருப்பதுபோலவே ஆட்டோமெட்டிக் அகலமான கதவுகள் இருக்கிறது. ஒவ்வொரு சீட்டும் தனித்தனியாக உள்ளன. உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே வந்தாலும் அகலமான பாதை, பஸ்சின் ரெண்டு பக்கமும் எமர்ஜென்சி வழி என ஆம்னி பஸ்களின் மொத்த அம்சத்தையும் இதில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

     கண்டக்டருக்கு ஃபேன்

    கண்டக்டருக்கு ஃபேன்

    இதில் எல்லாவற்றையும் விட ஹைலைட் இறங்கும் ஸ்டாப்பிங்கை அறிவிக்க ஸ்பீக்கர் வசதியும் பஸ்சில் உள்ளது. கண்டக்டருக்கு ஃபேன் வசதி, பஸ்சுக்கு எல்ஈடி லைட்டுகள் வசதி என அமர்க்களப்படுகிறது.

    பெல் வசதி

    பெல் வசதி

    அது மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகள் அவர்களது ஊன்றுகோலை வைக்க ஒரு தனி இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அவர்கள் இறங்கும் இடம் வந்துவிட்டால், அதனை தெரிவிக்க ஒரு ஸ்பெஷல் பெல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பரிதாபம்

    பரிதாபம்

    நம்ம தமிழக அரசு போகிற போக்கை பார்த்தால் தனியார் பஸ் முதலாளிகள் நிலைமை இனிமேல் பரிதாபம் போலதான் இருக்கிறது!

    English summary
    Tamil Nadu Cheif Minister Edapadi Palanisamy inaugurated 275 New bus Service worth of rupees 69 crores in Chennai secretariat office.These buses have more features including emergency door, cooling fans for conductors, speakers and much more..
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X