சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு சற்று சோர்ந்து போயிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திரும்பவும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார்! புது தெம்பு... உற்சாகம் என்று களம் இறங்கிவிட்டார்! இது திமுகவுக்கு பெரிய கலக்கத்தை தந்துள்ளதாக சொல்லப்படுகிறது!

தேர்தல் தோல்வி, மத்திய அமைச்சரவையில் அதிமுக புறக்கணிப்பு, ஓபிஎஸ் குடைச்சல், திமுகவின் அபார வெற்றி இதெல்லாம் எடப்பாடியாரை சூழ்ந்து இருந்தது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஆளுநர் சந்திப்பு, பிரதமர் சந்திப்பு என்று அடுத்தடுத்த வேலையில் இறங்கிவிட்டார்.

ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கிய நாளன்று தமிழக அரசியலே கூடு கண்டிருந்தது. அந்த சமயத்தில் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு முதல்வேலையாக ஆளுநரை சந்தித்து பேசினார் முதல்வர். அப்போதுதான் முதல்வரின் சுறுசுறுப்பு ஆரம்பமானது.

விடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா? விடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா?

ஓபிஎஸ் நெருக்கம்

ஓபிஎஸ் நெருக்கம்

ஆனால் ஆளுநரை சந்திப்பு தமிழக விவகாரங்கள் குறித்தே முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஏற்கனவே பாஜகவுன் நெருக்கத்தில் உள்ளதால், ஒற்றை தலைமை என்பதில் தனக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்று ஆளுநரிடம் முதல்வர் விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சட்டசபையை ஏன் கூட்டவில்லை என்று திமுக தரப்பு துளைத்தெடுத்து வருவதால், அதுகுறித்தும் தனது கலக்கத்தை ஆளுநரிடம் முன் வைத்தாராம் முதல்வர்!

அதிமுக தலைமை

அதிமுக தலைமை

சட்டசபையை கூட்ட திமுக ஏன் இப்படி துடிக்கிறது, ஒருவேளை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப் போகிறதோ, அப்படி கொண்டுவந்தால் பாதகமான நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற தவிப்பு அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ஆளுநரை சந்தித்து பேச, "அதெல்லாம் கவலைப்பட வேண்டாம், எதுவும் நடந்துவிடாது, தைரியமாக இருங்கள்" என்று நம்பிக்கை தந்துள்ளார். இதன்பிறகுதான் 7 பேர்விடுதலை, உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சும் ஆளுநரிடம் நடந்துள்ளது.

குழப்பங்கள்

குழப்பங்கள்

இதே தைரியத்தில்தான் மோடியை நேரில் பார்த்து சந்தித்து பேசியுள்ளார் முதல்வர். பிரதமராக பதவியேற்ற நாளில் பல குழப்பங்களுடன் காணப்பட்டார் எடப்பாடி. தேர்தல் தோல்விக்கு பிறகும் எந்த பேச்சும் பிரதமரிடம் வெளிப்படையாக பேசப்படவில்லை.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

என்னால நீ கெட்டே, உன்னால நான் கெட்டேன் என்ற பாணியிலேயே தோல்வி காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆளுநருடன் சந்திப்பு நடந்த பிறகு எடப்பாடியாருக்கு தெம்பு கூடியதாம். இந்த பின்னணியில்தான் மோடியையும் அவர் சந்தித்தார். மோடியை சந்தித்த கையோடு, நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசியுள்ளார். அமித்ஷா, நிதின் கட்கரியையும் சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

நம்பிக்கை இல்லா தீர்மானம்

அடுத்தடுத்து இவ்வளவு முக்கிய நபர்களை முதல்வர் சந்திக்க அடிப்படை காரணம் என்னவாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழக ஆட்சி மாற்றம் குறித்து பேசப்பட்டதா, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பேசப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் முதல்வர் தைரியமாக இருக்கிறாராம். இப்போது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும், அதை சமாளிக்க முடியும் என்று முதல்வர் தரப்பு தெம்பாக உள்ளதாம்.

தெம்பு

தெம்பு

ஒருவேளை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, திமுகவுக்கு நல்லதா என்றும் தெரியவில்லை. சபாநாயகர் மீது குறை சொல்லி, எந்த ஆட்சி மாற்றமும் நடக்க வாய்ப்பே இல்லாத நிலையில், திமுக திரும்பவும் இதே கோரிக்கையை கையில் எடுக்குமா, அல்லது உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் கவனத்தை திசைதிருப்புமா என்பது தெரியவில்லை. ஆனால் எடப்பாடி தரப்போ ஆளுநர், பிரதமர் சந்திப்புக்கு பிறகு தெம்பாகவே இருக்கிறாராம்!

English summary
It is said that CM Edapadi Palanisamy is making strategies in many ways to confront DMK Leader MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X