• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆரம்பிச்சாச்சு".. ஒரு போன்கூட வரலயாமே.. "அதெல்லாம் தானா வர வேண்டாமா".. வருத்தப்பட்ட எடப்பாடியார்!

|

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.. அதுவும் தன் கட்சிக்காரர்களை நினைத்து மனவேதனையில் இருக்கிறாராம்.. இப்படி ஒரு தகவல் கசிந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை சிங்கிள் சிங்கம்.. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தனியாகவே சமாளிக்க கூடியவர்... அதேசமயம், கட்சி எந்த விதத்திலும் சிதைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்.

இதற்காக இந்த 4 வருடங்களில் எத்தனையோ உட்கட்சி பிரச்சனைகளை, விவகாரங்களை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி சமாளித்துள்ளார்.. எத்தனையோ பேருக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.. சுதந்திரம் தந்துள்ளார்.. உரிமை தந்துள்ளார்.. இருந்தாலும், ராஜேந்திர பாலாஜி போன்றோர் ஏடாகூடமாக வாயை திறந்துவிடுவதால், அவர்களுக்கு அவ்வப்போது கடிவாளமும் போட்டும் வந்துள்ளார்.

சசிகலா

சசிகலா

தேர்தலுக்கு முன்பு, அதாவது சசிகலா பக்கம் சிலர் தாவிவிடக்கூடும் என்ற ஒரு பேச்சு அரசியல் களத்தில் பலமாக எழுந்தது.. அப்போது, அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.. அந்த கூட்டத்தில் சில விஷயங்களை எடப்பாடியார் மனம் விட்டும் பேசினார்.. குறிப்பாக, "உங்களுக்கு எல்லாம் இந்த 4 வருஷம் சுதந்திரம் தந்திருக்கேன்.. எனக்கு துரோகம் செய்துடாதீங்க.. நம்ம கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பேர் இருக்கு.. வரப்போகிற தேர்தலில் கடுமையாக உழைக்கணும்.. அடுத்த ஆட்சி நாமதான் என்றிருக்கணும்" என்று கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வந்தன.

அதிருப்தி

அதிருப்தி

அதேபோல, வேட்பாளர்கள் லிஸ்ட் அறிவிக்கும்போதும் பெரிதான எந்த அதிருப்தியையும் முதல்வர் சம்பாதிக்கவில்லை.. யார் மனதும் புண்படும்படியாகவும் நடந்து கொள்ளவில்லை.. இப்போது இந்த விஷயமெல்லாம் எதற்காக என்றால், முதல்வருக்கு குடலிறக்க ஆபரேஷன் நடந்து முடிந்தது இல்லையா? இப்போது வீட்டில் ரெஸ்ட்டில்தான் இருக்கிறார்.. ஆனால், இதுவரைக்கும் ஒருத்தரும் போன் செய்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவே இல்லையாம். சிவி சண்முகம் மட்டும்தான் போன் போட்டு விசாரித்துள்ளார்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

மற்ற அமைச்சர்கள், நிர்வாகிகள் விசாரிக்கவில்லை என்ற வருத்தம் எடப்பாடியாருக்கு இருக்கிறதாம்.. இதை ஓபிஎஸ்ஸிடமே சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.. முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஓபிஎஸ், 2 நாட்களுக்கு முன்பு, எடப்பாடியார் வீட்டுக்கு சென்றபோது, இப்படி சொல்லி வருத்தப்பட்டாராம்.. "இது கொரோனா டைம்.. நேர்ல வர முடியாது... ஆனால், ஒரு போன் பண்ணி விசாரிச்சு இருக்கலாமே.. இந்த அக்கறை, மரியாதை எல்லாம் தானாகவே வரணும்.. என்ன எல்லாரும் இப்படி இருக்காங்களே" என்று மனம் நொந்து பேசினாராம்.

 ரெஸ்ட் எடுங்க

ரெஸ்ட் எடுங்க

அதற்கு ஓபிஎஸ், "யார் யாருக்கு என்னென்ன பிரச்சனையோ, என்னென்ன வேலையோ? இதெல்லாம் பெரிசுபடுத்த வேண்டாம், மொதல்ல நல்லா ரெஸ்ட் எடுங்க.." என்று எடப்பாடியாருக்கு ஓபிஎஸ் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாராம்.. ஏற்கனவே, அரசு உயர் அதிகாரிகள் திமுக தலைமையை சந்தித்து பேசுவதாகவும், வாழ்த்து சொல்லி வருவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.. இந்த விஷயம் தெரிந்து எடப்பாடியார் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரிசல்ட்

ரிசல்ட்

கடந்த காலங்களில்எத்தனையோ நிர்வாகிகளுக்கு அவர்கள் கேட்காமலேயே பல உதவிகளை எடப்பாடியார் செய்த நிலையில், ஒருத்தர்கூட போனை போட்டு, அவரது உடல்நலம் குறித்து விசாரிக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.. இன்னும் ரிசல்ட்டே வரல.. அதுக்குள்ளயா?!

English summary
CM Edapadi Palanisamy is said to be upset over the ADMK Executives
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X