சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடந்தது.. யூ டர்ன் போட்டு ஃபார்முக்கு வந்த விஜயபாஸ்கர்.. மீண்டும் அதிரடிகள்.. அனல் பேச்சுக்கள்!

மீண்டும் அதிரடியான நடவடிக்கையில் களம் இறங்கி உள்ளார் விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

சென்னை: விஜயபாஸ்கரை ஒதுக்கிவிட்டார்கள், அமைச்சரவையை மாற்ற போகிறார்கள், என்ற 3 மாத அரசல் புரசல்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி அழுத்தமாக வைக்கப்பட்டுவிட்டது.. கடந்த 4 நாட்களாக செம பிஸியாக உள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.. பழைய மாதிரியே ரவுண்டு கட்டி அதிரடிகளை கையில் எடுத்துள்ளது பலரையும் கூர்ந்து கவனிக்க வைத்து வருகிறது!

குட்கா விவகாரம் தலைதூக்கியபோதே, விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பிடுங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், "குட்கா அமைச்சர்" என்று விமர்சிக்கப்பட்டும், சிபிஐ விசாரணை வரை நடந்து முடிந்ததும் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

இதற்கு பிறகுதான் கொரோனா சமயத்தில் விஜயபாஸ்கரின் செயல்பாடு மக்களால் உற்று கவனிக்கப்பட்டது.. பெரும் பாராட்டையும் பெற்றது.. ஒரு நிமிஷம்கூட ஓய்வில்லாமல் விஜயபாஸ்கர் தொற்றை ஒழிக்க அதிகமாகவே மெனக்கெட்டார்.. மிக சிறப்பாகவே செயல்பட்டார்.. நாலாபக்கமும் விஜயபாஸ்கரின் பெயர் ஒலிக்க தொடங்கியது.

அரசின் 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையின் மூலம் 1.47 இலட்சம் நபர்கள் பயன்-அமைச்சர் விஜயபாஸ்கர் அரசின் 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையின் மூலம் 1.47 இலட்சம் நபர்கள் பயன்-அமைச்சர் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இந்த சமயத்தில்தான் பீலா ராஜேஷ் முன்னிறுத்தப்பட்டார்.. விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்படுகிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.. இதை பற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோதும், அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்று மறுத்தார்.. இதையடுத்துதான் சில தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டார்.

பலிகடாவா?

பலிகடாவா?

அமைச்சரோடு ஒத்துழைத்து அமைச்சர் சொல்வதை அப்படியே கேட்டு செயல்பட்ட சுகாதாரத்துறை செயலாளரே மாற்றப்பட்டிருக்கிறார் என்றால், அமைச்சரும்தானே மாற்றப்பட வேண்டும்? அவரும் மாற்றப்படுவாரா? அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா? என்று திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதிரடிகள்

அதிரடிகள்

ஆனால் அமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று அப்போதே ஒருசில செயல்பாடுகளினால் தெரியவந்து விட்டது.. என்றாலும், இப்போது அது கண்ணெதிரே ஊர்ஜிதமாகி வருகிறது.. ஆமா.. பேக் டூ ஃபார்ம்-க்கு வந்துவிட்டார் விஜயபாஸ்கர்.. பழைய மாதிரியே பேட்டிகள் தர ஆரம்பித்துவிட்டார்.. ஆஸ்பத்திரிகளில் அதிரடி ஆய்வுகளில் இறங்கிவிட்டார்.. ஆய்வு நடத்திவிட்டு சென்றாலும்கூட, டாக்டர்களை போனில் கூப்பிட்டு விசாரித்து வருகிறார்.

முதல்வர் வாழ்த்து

முதல்வர் வாழ்த்து

நேற்று முன்தினம் தேசிய மருத்துவர் தினத்தில், அமைச்சருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்க, அந்த வீடியோவும் வெளியானது. முதல்வர் இப்படி பேசியதுதான் டர்னிங் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது... இந்த 4 நாட்களாக விஜயபாஸ்கரின் அதிரடிகள் கவனிக்கப்பட்டு வருவதுடன், அவரது பெயரும் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளது.. புதுக்கோட்டையிலேயே சொந்த தொகுதியில் ஒதுங்கிவிட்டார் அமைச்சர், என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

ஆக மொத்தம், அமைச்சரை மாற்றுவீர்களா என்று அப்போது முதல் கேள்வி எழுப்பி வரும் திமுகவுக்கு இப்போது வரை அந்த விஷயத்தில் ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது... ஆனால், அன்று ஏன் இவர் ஒதுக்கப்பட்டார்? இன்று ஏன் இவர் முன்னிறுத்தப்படுகிறார் என்றுதான் புரியவில்லை! எப்படியோ, இவரது அதிரடிகளால் தொற்றின் தீவிரமும் பரவலும் குறைந்தால் சரி!

English summary
cm edapadi palanisamy: minister vijayabaskar is back in action
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X