• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வேல் யாத்திரை பரபரப்புக்கு நடுவில்.. சத்தமில்லாமல் ஒரு சூப்பர் அறிவிப்பு.. ஸ்கோர் செய்த எடப்பாடியார்

|

சென்னை: பாஜக வேல் யாத்திரை விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு முதல்வர் தடை விதித்ததையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. அதேசமயம், சில கோரிக்கைகளையும் முதல்வருக்கு பொதுமக்கள் வைத்து வருகின்றனர்.

தேர்தல் பரபரப்புக்கு நடுவில், எதிர்க்கட்சிகளின் சலசலப்புகளுக்கு மத்தியில் எடப்பாடியார் தினமும் பொதுமக்களின் நலனை ஏதாவது ஒரு ரூபத்தில் வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார்.

அந்த வகையில், இப்போதும் ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக, ஆன்லைன் விளையாட்டால் பலரது வாழ்வு பறிபோயுள்ளது.

தமிழகத்தில் திட்டமிட்டபடி பாஜக தலைவர் முருகனின் வேல் யாத்திரை தொடங்கும்: வி.பி. துரைசாமி தமிழகத்தில் திட்டமிட்டபடி பாஜக தலைவர் முருகனின் வேல் யாத்திரை தொடங்கும்: வி.பி. துரைசாமி

 சூதாட்டம்

சூதாட்டம்

இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை தொலைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டு வரும் துயரமும், அதையொட்டி அவர்கள் குடும்பம் நடுத்தெருவில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரிதாபமும் ஏற்பட்டு வருகின்றன.. இதற்குதான் முதல்வர் ஒரே அறிவிப்பில் முடிவு கட்டி உள்ளார்.

 ட்வீட்

ட்வீட்

தன்னுடைய ட்வீட் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.. அதில், "இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது" என்று அறிவித்துள்ளார்.

 வாழ்த்து

வாழ்த்து

இதற்கு ட்விட்டரில் ஏராளமானோர் திரண்டு வந்து முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. "ஐயா, நீங்கள் இந்த ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்தது, உங்களால் மட்டுமே சாத்தியம். வேறயார் இருந்தாலும் இந்த ஐந்து வருடம் சமாளித்திருக்க முடியாது, மேலும் உங்களின் திறமை, நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவும் குணம், இளைஞர்களின் பாதுகாப்பு, அனைத்தையும் கண்டு வியந்துள்ளேன்." என்று வாழ்த்து கூறுகின்றனர்.

 திமுக தலைவர்

திமுக தலைவர்

மேலும் பலர், இதுபோன்ற நன்மைகளை நீங்கள் செய்வதால் பெருமை அடைகிறோம், திமுக தலைவரும் முதல்வரும் இது போல் சேர்ந்து நின்றால் தமிழகம் பொற்கழஞ்சியமாக மாறும். எவராலும். தமிழகத்தை ஒரு சுக்கும் செய்ய இயலாது. மற்ற கட்சிகள் அனைத்தும் காணாமல் போயிவிடும்.மக்களின் கரகோசம் உங்களை வந்து சேரும் வாழ்த்துகள்" என்றும் மனசார பாராட்டி வருகின்றனர்.

 சாராய வியாபாரம்

சாராய வியாபாரம்

அதேபோல, இன்னும் சிலர் வேறு கோரிக்கைகளையும், முதல்வருக்கு விடுத்து வருகின்றனர்... "ஆன்லைன் சூதாட்டம் என்பது பல ஆயிரம் கோடிகள் வருமானம் உள்ள ஒரு செயலி... சாராய வியாபாரம் போல அரசே நடத்தினால் டாஸ்மாக் கடை போல் நல்ல வருமானம் வரும். அந்த வருவாய் மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை நிறைவேற்ற உதவியாக இருக்கும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

 மது விற்பனை

மது விற்பனை

மேலும் சிலரோ, அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதற்கிணங்க மாதத்திற்கு ₹1,000 வைத்து விளையாட அனுமதி அளியுங்கள். இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் கொடுத்து வாங்கும் மதுவிற்கும் TASMAC தடைசெய்யவும் என்றும், சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளிலும் பேருந்து ரயில் நிலையம் செல்லும் பகுதிகளிலும் மது விற்பனை செய்பவர்களையும் செய்யத்தூண்டுபவர்களையும் இந்த அம்மாவின் அரது இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்... இதனால் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து மக்களை பாதுகாக்கவும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

English summary
CM Edapadi palanisamy takes action to ban online gambling
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X