சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்ல துண்டு இருக்கா.. அதை கட்டுங்க.. ஒருத்தருக்கு வந்துட்டா பூராம் தொத்திரும்.. எடப்பாடியார் பாசம்

சுற்றுப்பயணத்தின்போது சிறுவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாடினார்

Google Oneindia Tamil News

சென்னை: "நல்லா இருக்கீங்களா எல்லாரும்.. துண்டு கட்டுங்க போதும்.. துண்டு இருக்கா வீட்டில? முகத்துல கட்டிக்குங்க.. வேற எதுவும் தேவையில்லை.. வெளியில போகும்போது முககவசத்தை தயவு செய்து போட்டுட்டு போங்க.. இது தொத்து நோய்.. ஒருத்தருக்கு வந்துட்டா குடும்பம் பூரா பரவிடும்.. என்று சுற்றுப்பயணத்தின்போது, ரோட்டோரம் திரண்டு காத்திருந்த ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார் முதல்வர் எடப்பாடியார்!

Recommended Video

    சுற்றுப்பயணத்தின்போது சிறுவர்களிடம் உரையாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணத்தை தொடங்கி உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் எந்தளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நேரடியாகவே முதல்வர் சென்று பார்த்து வருகிறார்.

    CM Edapadi palanisamy talks with children during travel

    விவசாயிகளை சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிவதுடன் தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது என்ற ஆய்வினையும் கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் முதல்வர் நெடுஞ்சாலை ஒன்றில் சென்று கொண்டிருக்கிறார்.. அந்த வழியாக முதலமைச்சர் வருகிறார் என்ற தகவலறிந்து அப்பகுதி மக்கள் சாலையோரம் திரண்டு காத்திருக்கிறார்கள்.. பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என அந்த கிராமமே ரோட்டோரம் நின்று காத்து கொண்டிருக்கிறது.

    CM Edapadi palanisamy talks with children during travel

    எதிர்பார்த்தபடியே வாகனங்கள் வரிசையாக வருகின்றன.. அதில் கருப்பு கலர் காரில் வந்த முதல்வரின் வாகனமும் இந்த மக்களை கடந்து செல்கிறது. பெண்கள், சிறுவர்கள் தம்மை பார்க்கதான் ஆவலாக நிற்கிறார்கள் என்பதை காருக்குள் இருந்த முதல்வர் கவனித்துவிட்டார்.. இதையடுத்து அந்த கார் சற்று தள்ளி நிறுத்தப்படுகிறது.. அதில் இருந்து இறங்குகிறார் முதல்வர்

    முகத்தில் மாஸ்க்குடன், கைகளை பின்னாடி கட்டிக்கொண்டு குழந்தைகளை நோக்கி வருகிறார்.. கார் அங்கு நிறுத்தப்படும், முதல்வர் இப்படி திடுதிப்பென்று இறங்கி வருவார் என்று ஊர் மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.. அத்தனை பேர் முகத்திலும் சிரிப்பு.. "எல்லாரும் முககவசம் போடுங்கப்பா" என்பதுதான் அவர்களை பார்த்து எடப்பாடியார் சொன்ன முதல் வார்த்தை.

    CM Edapadi palanisamy talks with children during travel

    "துண்டு கட்டுங்க போதும்.. துண்டு இருக்கா வீட்டில? முகத்துல கட்டிக்குங்க.. வேற எதுவும் தேவையில்லை.. இந்த பகுதியில உங்களுக்கு தேவையான நீர் கிடைக்கும்.. நல்லா இருக்கீங்களா எல்லாரும் (கையை எடுத்து வணக்கம் சொல்கிறார்) வெளியில போகும்போது முககவசத்தை தயவு செய்து போட்டுட்டு போங்க.. இது தொத்து நோய்.. ஒருத்தருக்கு வந்துட்டா குடும்பம் பூரா பரவிடும்.. என்றார்.

    கொரோனாவை தடுக்க வல்லரசுகளே தடுமாறும் போது தமிழகம் சிறப்பாக கையாளுகிறது - முதல்வர் கொரோனாவை தடுக்க வல்லரசுகளே தடுமாறும் போது தமிழகம் சிறப்பாக கையாளுகிறது - முதல்வர்

    பிறகு அங்கிருந்த குழந்தைகளிடம், "என்ன படிக்கிறீங்க? எந்த ஸ்கூல்? நீங்க என்ன படிக்கிறீங்க? நீங்க? தினம் பஸ்ல போறீங்களா? நல்லா படிக்கணும்' என்று விசாரித்தார்.. திரும்பவும் ஒருமுறை எல்லாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி சென்றார் முதல்வர்.

    English summary
    CM Edapadi palanisamy talks with children during travel, this video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X