சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டென்ஷனில் எடப்பாடியார்.. :"அந்த" பக்கம் "இந்த" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்!

அதிமுக ஆலோசனை கூட்டம் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடந்தது

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் வருகையானது அதிமுக தலைமையை ரொம்பவே கலக்கத்திற்கு உள்ளாக்கி வருகிறது.. நடந்து முடிந்த அதிமுகவின் ஆலோசனை கூட்டத்திலும் இதை பற்றின விவாதமே அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

சசிகலா 27-ம் தேதி ரிலீஸ் ஆகிறார் என்றதுமே பரபரப்பு, அதிமுக, அமமுக, பாஜக கட்சிகளில் பரபரப்பு தொற்றி கொண்டது.. அவரது வருகையால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இருக்காது என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முதல்வரும், அமைச்சர் ஜெயக்குமாரும் மாறி மாறி பேட்டிகள் தந்தாலும், உள்ளூர கலக்கம் இருப்பதை மறுக்க முடியாது.

CM Edapadi Palanisamys AIADMK District Secretaries Meeting

அதேசமயம், சசிகலாவின் வருகையானது, அதிமுகவில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலேயே தாக்கத்தை தரக்கூடும் என்பதையும் மறுத்துவிட முடியாது... அதற்காகவே, அவசரம் அவசரமாக 27-ம்தேதி ஜெ.நினைவிடம் திறந்து வைக்க அறிவிப்பு வெளியானது.. அத்துடன், ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.

இந்த கூட்டத்தில், சசிகலா விடுதலை பற்றின பேச்சே தலைதூக்கி இருக்கிறது.. "இந்த முறை வெற்றி பெறுவது ஒன்றே குறிக்கோளுடன் அனைவரும் செயல்பட வேண்டும்.. அதிமுக நிர்வாகிகள் யாரும் துரோகங்களுக்கு விலை போய்டாதீங்க.. யாராவது எந்த பக்கமாவது சாய்ந்து விட போகிறார்கள்.. அப்படி எதுவும் நடந்துவிடாமல் அனைவரையும் அரவணைத்து செல்லுங்க, தேவையானவற்றை நாங்க செய்து தருகிறோம்" என்று ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக நம்பிக்கை தந்து பேசினார்களாம்.

ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவு தந்து பேசிய அந்த 2 பேரையும் முதல்வர் வார்ன் செய்திருப்பதாக செய்திகள் கசிந்தன.. அதேபோல, சசிகலாவை ரிலீசுக்கு முன்னாடியே சிறையில் சென்று சந்திக்க 2 பேர் விண்ணப்பம் செய்த விஷயமும் முதல்வர் காதுக்கு எட்டி உள்ள நிலையில், நிர்வாகிகளிடம் இப்படி ஒரு வேண்டுகோளை அதிமுக தலைமை வைத்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.

English summary
CM Edapadi Palanisamys AIADMK District Secretaries Meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X