சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னா அடி.. எடப்பாடியார்னா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா.. மிரண்ட சட்டசபை!

முதல்வர் எடப்பாடியாரின் சட்டசபை ஆவேச பேச்சு வைரலாகிறது

Google Oneindia Tamil News

சென்னை: என்னா அடி.. "கலக்கறாரே முதல்வர்" என்று பாராட்டுக்கள் குவிய தொடங்கி உள்ளன.. நேற்று சட்டசபையில் குடியுரிமை சட்டம் குறித்து முதல்வர் பேசிய ஆவேச பேச்சுக்களைதான் சோஷியல் மீடியாவில் இப்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்!

வெள்ளை வேட்டி சட்டை, விபூதி என சாந்தமாக காணப்படுபவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. எப்போதுமே மென்மை போக்கை கடைப்பிடிப்பவர்.. யாராக இருந்தாலும் இந்த முதல்வரை எளிதில் அணுகி பேசும் அளவுக்கு இயல்பானவர்.. கெடுபிடியோ, கடுகடு பேச்சோ என்றுமே கிடையாது.. இப்படித்தான் இந்த 3 வருஷமாக முதல்வரை நாம் பார்த்து வந்துள்ளோம்.

நேற்றுதான் முதல்முறையாக எடப்பாடியாரின் கோபத்தை பார்க்க நேர்ந்தது.. "எங்களை 37 எம்பிக்கள் இருக்கீங்களே... என்ன செய்யறீங்கன்னு கேள்வி கேட்டீங்களே.. இப்ப நீங்க 38 பேர் இருக்கிறீர்களே என்ன செய்யறீங்க? வேளாண் மண்டலத்தை நீங்களே பேசி வாங்க வேண்டியதுதானே" என்று முதல்வர் பேசியதும் கப்சிப் ஆனது சபை!!

தமிழ் மண்

தமிழ் மண்

தொடர்ந்து பேசிய முதல்வர், "இதனால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்க சொல்லுங்க நாங்க தீர்வு காணவேண்டும்... தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ் மண்ணில் பிறந்திருக்கின்ற எந்த சிறுபான்மை மக்கள் பாதிச்சிருக்காங்க என்று சுட்டிக்காடுங்க... நாங்க அதுக்கு பதில் சொல்றோம்.. அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றி நாடகமாடி, தவறான அவதூறான செய்தியையே சொல்லி... இன்றைக்கு நல்லா அமைதியாக நல்லபடியாக இருக்கும் தமிழ்நாட்டில் குந்தகம் ஏற்படும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறீர்களே.

ஆவேசம்

ஆவேசம்

என்ன சொல்லுங்க, யார் பாதிச்சிருக்கிறது சொல்லுங்க நான் விளக்கம் சொல்கிறேன்" என்று முதல்வர் இப்படி ஆவேசமாக பேசுவார்என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆனால், முதல்வர் இதை கேட்டபோது, ஸ்டாலின் அவையில் இல்லை.. அதேபோல, மூத்த தலைவர்கள் துரைமுருகன் உள்ளிட்டோரும் எந்த பதிலும் இதற்கு சொல்லவில்லை.

தீய சக்திகள்

தீய சக்திகள்

இந்த ஆவேச பேச்சுதான் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதிமுகவினர் இந்த வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.. "உண்மையின் ஆவேசம்... பொய் வதந்திகளை உடைத்து நொறுக்கும் ஆவேசம்.. ஒரு உண்மை தமிழனின் ஆவேசம்... ஒரு பொறுப்பு மிக்க மாநில முதல்வரின் ஆவேசம்... இந்தியாவை பிரிக்க சதி செய்யும் தீய சக்திகளுக்கு விட்ட சவால், ஆவேசம்.." என்று முதல்வரை தூக்கி வைத்து புகழ்கிறார்கள்..

திமுக

திமுக

சட்டமன்றத்திலேயே முதல்வர் இவ்வாறு பேசியதுதான் பெரிய ஹைலைட் ஆகிவிட்டது... துணிச்சலான பேச்சு என்றுதான் பெரும்பாலானோர் இதனை சொல்கிறார்கள்.. திமுக தரப்பில் ஏன் இதற்கு சபையில் பதில் சொல்லவில்லை என்பது தெரியவில்லை.. அதே சமயத்தில், இந்த சட்டத்தால் தமிழகத்துக்கு என்ன நன்மை என்று கேட்க கூடியவர்களும் உள்ளனர்... தமிழ்நாட்டில் ரொம்ப காலமாகவே வசித்து வரும் இலங்கை அகதிகள் நிலை என்னவாகும்? இலங்கை தமிழருக்கு எப்படி இரட்டை குடியுரிமை தர முடியும்? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

அற்புதமான பதிலடி

அற்புதமான பதிலடி

முதல்வரின் இந்த ஆவேச பேச்சுக்கு நிறைய கமெண்ட்கள் எதிர்ப்பும், ஆதரவுமாக வந்த வண்ணம் உள்ளன.. "எடப்பாடினா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா...என்னா அடி, "தூண்டி விடுபவர்கள் யார் அதன் மூலம் வேர் எங்கே போகிறது என கண்டுபிடிக்க வில்லை என்றால்இன்னும் பல பொய்யான போராட்டங்களை நிகழ்த்துவார்கள்... "மிகவும் அற்புதமான பதிலடி கொடுத்தீர்கள். 2021ல் உங்களின் வெற்றிக்கான சாத்தியகூறுகள் தெளிவாக தெரிகிறது?" என்று புகழந்தும், திமுகவை சரமாரி விமர்சித்தும் பதிவுகள் விழுந்தபடியே உள்ளன.

முட்டாள்களா?

முட்டாள்களா?

அதேபோல, "சட்டம் அமலானால்தான் பாதிப்பு என்பதால்தான் போராடுகிறோம். அமலாவதற்கு முன்னரே யாருக்கு பாதிப்பு காட்டு என்று கேட்பது என்ன வகை நியாயம் என்றும், "தீர்மானம் கொண்டுவந்த கேரளம் பாண்டிச்சேரி மேற்கு வங்காளம் முதல்வர்கள் எல்லாம் முட்டாள்களா?" என்றும் எதிர் கேள்விகளும் கேட்கப்பட்டு வருகின்றன.

கோப நெடி

இந்த சட்டம் சரியா, தவறா என்ற வாதத்திற்குள் போவதைவிட, 3 வருடம் நாம் பார்த்த முதல்வருக்கும் நேற்று பார்த்த முதல்வருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தது.. உண்மையான கோப நெடி அவரிடம் தென்பட்டது... சாது மிரண்டால் காடு கொள்ளாது! எந்த வெளிநடப்பும் முதல்வரின் இந்த கேள்விக்கு பதில் ஆகிவிட முடியாதுதான்!

English summary
cm edapadi palanisamys angry speech about caa, goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X